Share என்றால் என்ன? ஒரு கம்பெனியில் பங்கு வாங்கினால் உணமையில் என்ன கிடைக்கும்?
“ஒரு பங்கு வாங்கினா என்ன கிடைக்கும்?”, “இதுல நமக்கு உரிமை இருக்கா?”, “Profit வந்தா எப்படி, loss வந்தா என்ன ஆகும்?” என்ற குழப்பங்கள் இயல்பானவை.
நானும் இதே கேள்விகளோட தான் பங்கு சந்தைக்கு வந்தேன். ஆரம்பத்தில் share-ஐ ஒரு ticket மாதிரி தான் பார்த்தேன். “இந்த பங்கு மேலே போகுமா?” என்ற கேள்வி மட்டுமே இருந்தது. ஆனால் பல இழப்புகளுக்குப் பிறகு தான் புரிந்தது – Share என்பது price movement இல்லை, அது ownership.
இந்த பதிவில், share என்றால் என்ன, ஒரு கம்பெனியில் பங்கு வாங்கினால் நமக்கு உண்மையில் என்ன கிடைக்கிறது, profit & loss எப்படி வேலை செய்கிறது என்பதை முதல் முறையாக படிப்பவருக்கும் புரியும் வகையில் தெளிவாக விளக்கப் போகிறேன்.
Share என்றால் என்ன?
Share அல்லது Stock என்பது ஒரு கம்பெனியின் ownership-ஐ குறிக்கும் சான்று.
ஒரு கம்பெனி 100 பங்குகளை வெளியிட்டிருந்தால், அதில் ஒரு பங்கை நீங்கள் வாங்கினால், அந்த கம்பெனியின் 1% உரிமையாளர் நீங்கள்.
இதைக் கேட்கும் போது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
“₹500-க்கு ஒரு பங்கு வாங்கினா, நான் அந்த கம்பெனியின் owner-ஆ?”
ஆம் – சிறிய அளவில், ஆனால் உண்மையிலேயே owner தான்.
இந்த concept புரியாமல் தான் பலர் share-ஐ lottery ticket போல treat செய்கிறார்கள்.
Share = Ownership என்றால் என்ன அர்த்தம்?
Ownership என்றால், நீங்கள் அந்த கம்பெனியின்:
- வளர்ச்சியில் பங்குபெறுகிறீர்கள்
- லாபத்தில் பங்குபெற வாய்ப்பு பெறுகிறீர்கள்
- சில நேரங்களில் loss-ஐயும் பகிர்கிறீர்கள்
நீங்கள் office-க்கு போய் வேலை செய்ய வேண்டியதில்லை.
Business decision எடுக்க வேண்டியதில்லை. ஆனால் business நல்லா ஓடினா, அதன் பலன் உங்களுக்கும் வரும். இதுதான் share ownership-ன் அடிப்படை.
ஒரு கம்பெனியில் பங்கு வாங்கினால் என்ன கிடைக்கும்?
ஒரு share வாங்கினால் உடனே cash flow கிடைக்கும் என்று நினைப்பது beginner mistake. உண்மையில் share வாங்கினால் கிடைப்பது:
- கம்பெனியின் growth-ல participation
- Share price appreciation வாய்ப்பு
- Dividend கிடைக்கும் சாத்தியம்
- Long-term wealth creation opportunity
இவை எல்லாம் நேரம் + பொறுமை இருந்தால் தான் கிடைக்கும்.
நான் ஆரம்பத்தில் “இந்த share நாளைக்கு என்ன தரும்?” என்ற mindset-ல இருந்தேன். பிறகு தான் “இந்த business 5 வருடத்தில் எங்கே இருக்கும்?” என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
Profit எப்படி கிடைக்கிறது?
நீங்கள் வாங்கும் நிறுவனங்களின் Share-ல் profit இரண்டு வழிகளில் கிடைக்கிறது.
1. Share Price Appreciation
நீங்கள் ₹200-க்கு வாங்கிய ஒரு பங்கு, கம்பெனி வளர்ச்சியால் ₹400 ஆகிறதென்றால், அந்த விலை உயர்வுதான் profit.
2. Dividend
சில கம்பெனிகள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை shareholders-க்கு dividend ஆக கொடுக்கும். இது எல்லா கம்பெனிகளும் செய்யாது.
Profit guaranteed இல்லை. ஆனால் business growth இருந்தால், probability உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
Loss எப்படி வருகிறது?
நீங்கள் வாங்கும் நிறுவனங்களின் Profit போலவே loss-மும் share-ல இயல்பான ஒன்று.
Loss வர காரணங்கள்:
- கம்பெனி business சரியாக போகவில்லை
- Overvaluation-ல் share வாங்கப்பட்டது
- Market sentiment negative ஆக மாறியது
- Patience இல்லாமல் panic selling
நான் அனுபவத்தில் உணர்ந்தது – Share-ல loss பெரும்பாலும் business காரணமாக வருவதில்லை, investor behaviour காரணமாக தான் வரும்.
Shareholder-க்கு இருக்கும் உரிமைகள்
ஒரு shareholder ஆக இருப்பதால், உங்களுக்கு சில அடிப்படை உரிமைகள் இருக்கும்.
- Annual report பார்க்கும் உரிமை
- Company performance பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை
- Dividend அறிவிக்கப்பட்டால் அதை பெறும் உரிமை
ஆனால் day-to-day business control உங்களுக்கு கிடையாது.
அதற்காக தான் management இருக்கும்.
Share price ஏன் மேலே கீழே போகிறது?
Share price என்பது ஒரே காரணத்தால் மேலே கீழே நகராது.
அது பாதிக்கப்படுவது:
- Company earnings
- Future growth expectations
- Economic conditions
- Market sentiment
- Demand & supply
இதைக் புரிந்துகொள்ள, பங்கு சந்தை எப்படி வேலை செய்கிறது என்ற அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
(இதற்கான முழு விளக்கம் இந்த பதிவில் உள்ளது:
👉 பங்கு சந்தை என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?)
Investor vs Trader – Share-ஐ எப்படி பார்க்க வேண்டும்?
- Trader share-ஐ ஒரு price movement-ஆ பார்க்கிறார்.
- Investor share-ஐ ஒரு business ownership-ஆ பார்க்கிறார்.
இரண்டுமே தவறு இல்லை. ஆனால் beginner-ஆ இருந்தால், ownership mindset safer. நான் trading mindset-ல இருந்தபோது losses அதிகம். Investment mindset-க்கு மாறிய பிறகு, stability வந்தது.
என் அனுபவம்: Share-ஐ chart-ஆ பார்த்ததிலிருந்து ownership-ஆ பார்க்கும் வரை
ஆரம்பத்தில் நான் share-ஐ ஒரு business-ஆ பார்க்கவே இல்லை. chart-ல ஓடும் candle-களும் line-களும் தான் எல்லாம் போல நினைத்தேன். தினமும் price check பண்ணிக்கிட்டே இருந்தேன்; மேலே போனாலே சந்தோஷம், கொஞ்சம் கீழே வந்தாலே மனசு கலங்கிடும். ஒரு small loss வந்தாலும், அது பணத்தை விட மனதை அதிகமாக பாதிக்கும். panic-ஆ எடுத்த முடிவுகள் தான் தொடர்ந்து இழப்புகளுக்குக் காரணமாக மாறின. அந்த இழப்புகள் ஒரே நாளில் என்னை மாற்றவில்லை, ஆனால் மெதுவாக என்னை நிறுத்தி யோசிக்க வைத்தது.
அப்போதுதான் ₹1,00,000 capital-உடன் புதுசா start பண்ண முடிவு எடுத்தேன். இந்த முறை share-ஐ chart-ஆ இல்ல, business-ஆ பார்த்தேன். குறைவான companies, strong fundamentals, long-term view – இவைகள்தான் என் focus ஆனது. Overnight profit வரவில்லை. ஆனால் மனசுக்கு peace வந்தது, முடிவுகளில் confidence வந்தது, என்ன செய்கிறேன் என்ற clarity உருவானது. அதுதான் அந்த பணத்தை விட மதிப்புள்ள மாற்றம்.
Beginners-க்கு தெரிந்திருக்க வேண்டிய உண்மைகள்
Share என்பது quick money tool இல்லை. Ownership mindset இல்லாமல் invest செய்தால் stress தான் அதிகம். Share-ஐ புரிந்து கொள்ள, broker charges, transaction costs கூட தெரிந்திருக்க வேண்டும்.
(இதற்கான முழு விவரம்: Angel one புரோக்கர் பற்றிய தகவல்களை கொடுத்துளேன் படியுங்கள்)
Conclusion
Share என்றால் chart மட்டும் அல்ல. chart-ல ஓடும் line-களும் candle-களும் ஒரு கம்பெனியின் முழு உண்மையைக் காட்டாது. Share tip மட்டும் அல்ல; யாரோ சொன்ன ஒரு buy call-ல் உங்கள் எதிர்காலம் மறைந்திருக்காது. Share quick profit promise கூட அல்ல; ஒரே நாளில் பணக்காரன் ஆக்கும் ஒரு shortcut-ஆ பங்கு சந்தை வேலை செய்யாது.
Share என்பது, ஒரு business-ல் ownership. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பங்கும், அந்த கம்பெனியின் வளர்ச்சியில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள் என்ற அர்த்தம். இந்த ஒரு உண்மை புரிந்த நாளிலிருந்து தான், பங்கு சந்தையைப் பார்க்கும் பார்வை மாற ஆரம்பிக்கும். விலை ஏற்ற இறக்கம் மட்டும் முக்கியமாகத் தெரியாது; கம்பெனி எங்கே போகிறது, அது எப்படி வளர்கிறது என்பதுதான் முக்கியமாகத் தெரியும். இந்த mindset வந்தால், பங்கு சந்தை பயமாக இல்லை, புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நீண்ட பயணமாக மாறிவிடும்.

0 Comments