Advertisement

பங்கு சந்தை என்றால் என்ன? – ஒரு எளிய தமிழ் விளக்கம்

பங்கு சந்தை என்றால் என்ன? What is Stock Market in Tamil – Complete Beginner Explanation

   பங்கு சந்தை என்ற வார்த்தை இந்தியாவில் நிறைய பேருக்கு பயத்தை உருவாக்குகிறது. யாராவது “பங்கு சந்தை” என்று சொன்னாலே, சிலருக்கு அது சூதாட்டம் போல தோன்றும், சிலருக்கு ஒரே நாளில் பணம் இரட்டிப்பாகும் இடம் போல தோன்றும். நானும் ஆரம்பத்தில் இதே குழப்பத்தில்தான் இருந்தேன். பங்கு சந்தை பற்றி சரியான புரிதல் இல்லாமல் நுழைந்ததால், பல தவறான முடிவுகள் எடுத்தேன், அதனால் இழப்புகளையும் சந்தித்தேன். அந்த இழப்புகளுக்குப் பிறகே பங்கு சந்தை உண்மையில் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

பங்கு சந்தை என்பது ஒரு விளையாட்டு அல்ல. அது ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பின் முக்கியமான ஒரு பகுதி. கம்பெனிகள் வளர்ச்சிக்காக பணம் தேவைப்படும்போது, அந்த பணத்தை பொதுமக்களிடமிருந்து திரட்டும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மேடையே பங்கு சந்தை. அந்த பணத்தை கொடுக்கும் மக்கள், அந்த கம்பெனியின் ஒரு சிறிய உரிமையாளர்களாக மாறுகிறார்கள். அந்த உரிமையை குறிக்கும் சான்றுதான் பங்கு அல்லது stock.

What is Stock Market in Tamil 2026

பங்கு சந்தை என்றால் என்ன – நான் புரிந்த உண்மை

      பங்கு சந்தை என்பது சூதாட்டம் அல்ல. ஆனா, சூதாட்ட மனநிலையுடன் நுழைந்தால் அது சூதாட்டமாக மாறிவிடும்.

பங்கு சந்தை என்பது, கம்பெனிகள் தங்களின் வளர்ச்சிக்காக பொதுமக்களிடமிருந்து பணத்தை திரட்டும் ஒரு அமைப்பு. அந்த பணத்தை கொடுக்கும் மக்கள், அந்த கம்பெனியின் ஒரு சிறிய உரிமையாளர்களாக மாறுகிறார்கள். இந்த ownership-ஐ தான் share அல்லது stock என்று சொல்கிறோம்.

இந்த உண்மையை நான் ஆரம்பத்தில் புரிந்துகொள்ளவில்லை.
நான் பங்கு சந்தையை “விலை ஏறுதா? இறங்குதா?” என்ற கோணத்தில் மட்டும் பார்த்தேன். அதனால்தான், பங்கு = கம்பெனி என்பதை உணராமல், பல தவறான முடிவுகள் எடுத்தேன்.

பங்கு சந்தை எப்படி செயல்படுகிறது?

     பங்கு சந்தை வேலை செய்வது அடிப்படையில் வாங்குபவர்கள் மற்றும் விற்குபவர்கள் என்பவர்களின் சமநிலையைச் சுற்றித்தான். ஒரு பங்கிற்கு வாங்குபவர்கள் அதிகமானால், அதன் விலை உயருகிறது. அதே பங்கிற்கு விற்குபவர்கள் அதிகமானால், அதன் விலை குறைகிறது. இது வெளிப்படையாக எளிதாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் பல காரணங்கள் செயல்படுகின்றன.

ஒரு கம்பெனியின் வருமானம் அதிகரிக்கிறதா, அதன் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கிறது, பொருளாதார சூழ்நிலை என்ன, முதலீட்டாளர்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதெல்லாம் சேர்ந்து அந்த பங்கின் விலையை பாதிக்கிறது. நான் ஆரம்ப காலத்தில் விலை மட்டும் பார்த்து முடிவு எடுத்தேன். அந்த நேரத்தில் ஏன் அந்த விலை உயருகிறது அல்லது குறைகிறது என்ற கேள்விக்கு நான் பதில் தேடவில்லை. அதுதான் தொடர்ச்சியான இழப்புகளுக்குக் காரணமாக அமைந்தது.

Public Company என்றால் என்ன?

   ஒரு கம்பெனி தன் பங்குகளை பொதுமக்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கும்போது, அது Public Company ஆக மாறுகிறது. இப்படிப்பட்ட கம்பெனிகள் தங்கள் நிதி விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். லாபம், இழப்பு, கடன், வருமானம், எதிர்கால திட்டங்கள் போன்ற தகவல்கள் எல்லாம் அனைவருக்கும் கிடைக்கும்படி இருக்கும்.

இந்த வெளிப்படைத்தன்மை முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு. நான் ஆரம்பத்தில் தகவல் இல்லாமல், யாரோ சொன்னதை நம்பி முதலீடு செய்தேன். பின்னர் public companies-யின் financial data-வைப் பார்க்க கற்றுக்கொண்ட பிறகுதான், முடிவுகள் சற்று நிலைத்ததாக மாறின.

Stock அல்லது Share என்றால் என்ன?

   Stock அல்லது Share என்பது ஒரு கம்பெனியின் ownership-ஐ குறிக்கும். ஒரு பங்கு வாங்கினால், அந்த கம்பெனியின் ஒரு சிறிய பங்குதாரராக நாம் மாறுகிறோம். கம்பெனி வளர்ந்தால், அதன் பங்கு விலை உயரலாம். கம்பெனி சரியாக செயல்படவில்லை என்றால், பங்கு விலை குறையவும்.

நான் ஒரு காலத்தில் பங்குகளை chart-ல் ஓடும் எண்களாக மட்டும் பார்த்தேன். ஆனால் பங்கு என்பது கம்பெனி என்பதைக் கவனிக்காத வரை, முதலீட்டில் நிலைத்தன்மை வரவில்லை. இந்த பார்வை மாறிய பிறகே, நான் எடுக்கும் முடிவுகளிலும் மாற்றம் வந்தது.

பங்குகளை வாங்குவதும் விற்குவதும் எப்படி?

    இந்தியாவில் பங்குகளை வாங்கவும் விற்கவும் பங்கு சந்தைகள் செயல்படுகின்றன. முக்கியமாக NSE மற்றும் BSE. நாம் trading app-ல் buy அல்லது sell செய்கிறோம் என்றால், அந்த உத்தரவு இந்த பங்கு சந்தைகளுக்கு சென்று, பொருந்தும் விலை கிடைத்த பிறகே வர்த்தகம் நிறைவேறும்.

ஆரம்ப காலத்தில் நான் அதிகமாக வாங்கி விற்றேன். அதனால் brokerage செலவு, தவறான entry-கள் எல்லாம் சேர்ந்து capital குறைந்தது. பின்னர் தான் குறைவாக, தெளிவாக முடிவு எடுப்பது முக்கியம் என்பதை புரிந்துகொண்டேன்.

பங்கு விலை எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

    பங்கு விலை யாரோ ஒருவர் நினைத்த மாதிரி தீர்மானிக்கப்படுவதில்லை. அது பல காரணிகளின் கூட்டுத்தொகை. கம்பெனியின் லாபம், எதிர்கால வளர்ச்சி, பொருளாதார சூழ்நிலை, interest rate, அரசியல் மற்றும் பொருளாதார செய்திகள், முதலீட்டாளர்களின் மனநிலை போன்றவை எல்லாம் சேர்ந்து பங்கு விலையை உருவாக்குகின்றன.

பல நேரங்களில் செய்தி வந்த பிறகே விலை நகர்ந்திருக்கும். இதை நான் அனுபவத்தில் புரிந்துகொண்டேன். அதனால்தான், செய்தி மட்டும் பார்த்து முதலீடு செய்வது பல நேரங்களில் தாமதமான முடிவாக மாறுகிறது.

Market Indices என்றால் என்ன?

  Market Index என்பது மொத்த பங்கு சந்தையின் நிலையை காட்டும் அளவுகோல். Sensex, Nifty போன்ற index-கள் பெரிய கம்பெனிகளின் பங்கு விலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. Index மேலே போகும் போது, சந்தையில் ஒட்டுமொத்த நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஆனால் index மேலே இருப்பது எல்லா பங்குகளுக்கும் லாபம் தரும் என்பதில்லை. இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ளாத பல beginners தவறான எதிர்பார்ப்புகளுடன் சந்தையில் நுழைகிறார்கள்.

பங்கு சந்தையில் என்னென்ன வர்த்தகம் செய்யப்படுகிறது?

   பங்கு சந்தையில் shares மட்டும் இல்லை. Bonds, ETFs, derivatives (futures மற்றும் options) போன்ற பல financial instruments வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஆனால் ஆரம்ப நிலை முதலீட்டாளர்களுக்கு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் புரிந்து கொள்ள முயற்சிப்பது குழப்பத்தை உருவாக்கும்.

நான் derivatives-க்கு சீக்கிரம் சென்றதால், தேவையற்ற risk-ஐ எடுத்தேன். shares-ல் அடிப்படை புரிதல் வந்த பிறகே மற்ற instruments-ஐ புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் அனுபவம்.

பங்கு சந்தையின் பயன்கள்

     பங்கு சந்தை நீண்ட காலத்தில் wealth உருவாக்க உதவுகிறது. பணவீக்கத்தை எதிர்க்கும் திறன் இதற்கு உள்ளது. சில கம்பெனிகள் dividend மூலம் கூடுதல் வருமானமும் தருகின்றன. வங்கியில் பணம் பாதுகாப்பாக இருக்கும்; ஆனால் அதே அளவுக்கு வளர்ச்சி இருக்காது.

இந்த பயன்கள் எல்லாம் நேரம் மற்றும் பொறுமை இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

பங்கு சந்தையின் செயல்பாடுகள்

   பங்கு சந்தை கம்பெனிகளுக்கு capital வழங்குகிறது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு முதலீட்டு வாய்ப்பையும் உருவாக்குகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஒரு system-ஆக புரிந்துகொண்ட பிறகே, சந்தையைப் பற்றிய பயம் குறைய ஆரம்பித்தது.

ஏன் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்?

      ஒரு காலத்தில் salary மட்டும் போதுமானதாக இருந்திருக்கலாம். இன்று நீண்ட கால பாதுகாப்பை உருவாக்க, பணத்தை வேலை செய்ய வைப்பது அவசியமாகிறது. பங்கு சந்தை அதற்கான ஒரு வழி. அதில் risk இருக்கிறது, அதே நேரத்தில் growth-க்கும் வாய்ப்பு இருக்கிறது.

பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்யலாம்?

    முதலில் demat account மற்றும் trading account திறக்க வேண்டும். அதன் பிறகு வங்கிக் கணக்கை இணைத்து, கம்பெனிகளைப் பற்றி அறிந்து முதலீடு செய்ய வேண்டும். நான் பல இழப்புகளுக்குப் பிறகு, ₹1,00,000 முதலீட்டுடன், ஒரே பங்கில் போடாமல், quality companies-யில் பகிர்ந்து முதலீடு செய்ய ஆரம்பித்தேன். அந்த முடிவு தான் எனக்கு மனநிம்மதியையும் தெளிவையும் கொடுத்தது.

கம்பெனிகள் ஏன் பங்குகளை வெளியிடுகின்றன?

    கம்பெனிகள் business-ஐ விரிவாக்க capital தேவைப்படும்போது, bank loan மட்டும் சார்ந்து இருக்க விரும்பமாட்டார்கள். Shares வெளியிட்டு, ownership-ஐ பகிர்ந்து கொண்டு capital raise செய்வது அவர்களுக்கு சுமை குறைந்த வழியாக இருக்கும். Listing மூலம் transparency, brand value, trust எல்லாம் அதிகரிக்கிறது.

பங்கு சந்தை கட்டுப்படுத்தப்பட்டதா?

     இந்தியாவில் பங்கு சந்தை SEBI மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. Brokers, exchanges, listed companies எல்லாம் விதிமுறைகளுக்கு உட்பட்டவை. இதன் நோக்கம் முதலீட்டாளர்களை பாதுகாப்பது. நீங்கள் டீமேட் கணக்கு திறக்க நினைத்தாள் Dhan ஓபன் செய்வதற்கான லிங்க் கொடுத்துள்ளேன் அதை பயன்படுத்தி கொள்ளவும். Open Dhan Demat Account 

பங்கு சந்தை நேரங்கள்

    இந்திய பங்கு சந்தை பொதுவாக காலை 9:15 முதல் மாலை 3:30 வரை இயங்குகிறது. இந்த நேரங்களில் தான் regular trading நடைபெறும்.

பங்கு சந்தை விதிமுறைகள்

      Insider trading தடை, disclosure rules, investor grievance system போன்ற பல விதிமுறைகள் பங்கு சந்தையில் நடைமுறையில் உள்ளன. இவை சந்தையை ஒழுங்காகவும் நியாயமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

பங்கு சந்தையின் வகைகள்

    Primary Market மற்றும் Secondary Market என்பது பங்கு சந்தையின் இரண்டு முக்கிய பகுதிகள். Primary Market-ல் IPO மூலம் பங்குகள் முதல் முறையாக வெளியிடப்படுகின்றன. Secondary Market-ல் அந்த பங்குகள் தினசரி வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன. இந்த இரண்டின் வித்தியாசத்தை புரிந்துகொண்ட பிறகே IPO மற்றும் daily trading பற்றிய குழப்பம் தெளிவாகும்.

Dividend என்றால் என்ன?

    Dividend என்பது கம்பெனி தன் லாபத்தின் ஒரு பகுதியை பங்குதாரர்களுடன் பகிர்வது. எல்லா கம்பெனிகளும் dividend தருவதில்லை. நிலையான லாபம் கொண்ட கம்பெனிகள் தான் பொதுவாக dividend வழங்குகின்றன.

முடிவுரை

     பங்கு சந்தை ஒரு கருவி. அது ஒருவரை நிதிய வளரச்செய்யவும் முடியும், தவறான புரிதலுடன் அணுகினால் பாதிக்கவும் முடியும். நான் இழப்புகளை சந்தித்த பிறகே தெளிவாக கற்றுக்கொண்டேன். அதே பாதையை நீங்கள் கடக்க வேண்டிய அவசியம் இல்லை.

பங்கு சந்தை என்பது சூதாட்டம் அல்ல. அது அறிவு, பொறுமை, நேரம் ஆகியவற்றை சோதிக்கும் ஒரு நீண்ட பயணம்.

Post a Comment

0 Comments