Business Idea
Stock market
Wealth
Rent Stocks: FD-ஐ விட அதிக லாபமா? ₹1 லட்சம் முதலீட்டில் Passive Income எவ்வளவு கிடைக்கும் – முழு விளக்கம்
பங்குச் சந்தையில் “Buy & Hold” மட்டும் இல்லாமல், இப்போது Rent Stocks என்ற புதிய முறை மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த முறையில், முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள shares-ஐ “rent”க்கு கொடுத்து Passive Income பெற முடியும்.
இந்த வசதி NSE மூலம் regulation செய்யப்பட்ட ஒரு முறையாகும். ₹1 லட்சம் இருந்தால் – எதில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று பார்க்கலாம்.
பொதுவாக மக்கள் பயன்படுத்தும் முதலீட்டு வழிகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்:
🏦 Rent Stocks vs Savings Account – எந்தது அதிக லாபம்?
Savings Account மிகவும் safe. ஆனால் வருமானம் மிகவும் குறைவு.
- Savings Account: ₹1 லட்சத்திற்கு வருடம் 2% முதல் 5% வரை வட்டி கிடைக்கலாம், அதன் மூலம் ₹2,000 – ₹4,000 வருமானம் கிடைக்கலாம்.
- Rent Stocks: ₹3,000 – ₹40,000+ (demand அடிப்படையில்)
இதனால், Rent Stocks மூலம் கிடைக்கும் passive income, savings account-ஐ விட பல மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
🏦 Rent Stocks vs FD – Safe vs Smart Income
FD (Fixed Deposit) என்பது இந்தியாவில் மிகவும் popular low risk investment.
- FD வருமானம்: ஆண்டுக்கு 5% முதல் 8.5% வரை வட்டி கிடைக்கும். ₹6,000 – ₹7,000 / வருடம் லாபம் கிடைக்கும்
- Rent stocks மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஒப்பிட்டால் இது குறைவுதான்.
FD safe ஆனால் fixed return, Rent Stocks → demand அதிகமா இருந்தால் 2x–5x earn money வாய்ப்பு உருவாக்கலாம்.
📈 Rent Stocks vs Mutual Funds – Growth vs Passive Income
Mutual Funds long-term wealth creationக்கு நல்லது.
- Mutual Funds: பங்கு சந்தையில் உள்ள பங்குகளின் வளர்ச்சியை பொறுத்து தான் வருமானம் கிடைக்கும், சராசரியாக ₹10,000 – ₹12,000 கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- Rent Stocks ஒப்பிட்டால் பாதுகாப்பான மற்றும் ஓரளவுக்கு நல்ல லாபம் என்று கூறலாம்.
Mutual Funds → capital growth. Rent Stocks → regular passive income
🪙 Rent Stocks vs Digital Gold – Stability vs Income
Digital Gold ஒரு பாதுகாப்பான asset.
- Digital Gold: ₹8,000 – ₹10,000 வரை வருமானம் கொடுக்கும், ஆனால் இதற்கு ஒரு கட்டணங்கள் இருக்கும்.
- மற்ற முதலீடுகளுடன் இதை ஒப்பிட்டால் பாதுகாப்பான முதலீடு தான், ஆனால் வருமானம் மிகவும் குறைவு, மேலும் வாங்கும் போதும் விற்கும் போதும் கட்டணங்கள் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
- மேலும் இதற்கான நிறுவனங்கள் மற்றும் apps கண்டறிந்து அவற்றின் உண்மைத்தன்மை தெரிந்து செயல்பட வேண்டும்.
Gold price appreciation மட்டும். Rent Stocks → direct income generation.
📊 Rent Stocks vs ETF – Market Returns vs Extra Income
ETF ஒரு diversified investment.
- ETF: ₹10,000 – ₹15,000 வரை தான் வருமானம் கிடைக்கும், இது ஒரு பங்கு சந்தை சார்ந்த பாதுகாப்பான முதலீடு.
- நேரடியாக பங்குகள் மற்றும் nifty, gold போன்றவற்றில் முதலீடு செய்வதை கட்டிலும் risk குறைவு மேலும் வருமானமும் குறைவு.
ETF → market returns. Rent Stocks → market + lending income
🌐 Rent Stocks vs Online Earn Money Platforms
Online earning methods அதிகம் இருந்தாலும் consistency சிக்கல்.
- YouTube → time + effort அதிகம்
- Freelancing → skills தேவை
- Affiliate → unpredictable
👉 Rent Stocks மட்டும்:
✔️ Low Effort
✔️ Passive Income
✔️ Relatively Low Risk
Rent Stocks எப்படி வேலை செய்கிறது?
Rent Stocks என்பது உங்கள் கையில் இருக்கும் shares-ஐ விற்காமல், அதை மற்றவர்களுக்கு “குத்தகைக்கு” (rent) கொடுத்து அதிலிருந்து வருமானம் சம்பாதிக்கும் ஒரு முறை. இது NSE (Stock Lending & Borrowing Mechanism) மூலம் நடைபெறும் ஒரு regulated system.
இதை ஒரு எளிய உதாரணத்துடன் புரிந்துகொள்ளலாம் 👇
நீங்கள் ₹1 லட்சம் மதிப்பில் ஒரு company shares வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கலாம். அந்த shares-ஐ நீங்கள் உடனே விற்க விரும்பவில்லை, long-term-ஆ hold பண்ணிக்கிட்டு இருக்கிறீர்கள். இந்த நேரத்தில், market-ல் சில traders அந்த same shares-ஐ borrow பண்ணி “short selling” செய்ய விரும்புவார்கள்.
அதற்காக அவர்கள் உங்களிடம் இருந்து அந்த shares-ஐ “rent”க்கு எடுப்பார்கள். இங்கே தான் உங்கள் earning ஆரம்பமாகிறது. அவர்கள் அந்த shares-ஐ borrow பண்ணும் போது, ஒரு “lending fee” அல்லது “rent” கட்டணம் கொடுப்பார்கள். அந்த fee தான் உங்களுக்கு Passive Income ஆக கிடைக்கும்.
உதாரணமாக:
நீங்கள் வைத்திருக்கும் sharesக்கு அதிக demand இருந்தால், அந்த shares-ஐ borrow பண்ண பலர் வருவார்கள். Demand அதிகமா இருந்தால் rent (interest மாதிரி income) கூட அதிகமாக இருக்கும். Demand குறைந்தால் income குறையும்.
முக்கியமான விஷயம் என்னனா, Shares உங்கள் பெயரில் தான் இருக்கும் நீங்கள் owner தான், Dividend கூட உங்களுக்கே வரும் ஆனால் அந்த shares ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (lock-in period) lendingக்கு கொடுக்கப்படும். அந்த காலத்தில் நீங்கள் அதை உடனே sell பண்ண முடியாது.
நீங்கள் எந்த extra வேலை இல்லாமல் Earn Money + Passive Income பெறுகிறீர்கள்
இதனால் Rent Stocks என்பது, உங்கள் portfolio-வை “idle asset” இருந்து “income generating asset” ஆக மாற்றும் ஒரு smart வழி ஆகிறது.
📱 எந்த நிறுவனங்கள் Rent Stocks வசதி கொடுக்கின்றன?
இந்த feature இந்தியாவில் சில brokerage platforms மூலம் கிடைக்கிறது:
- Dhan App
- Zerodha Kite
- Upstox
அதனால் இது ஒரு legal & trusted earning method
Rent Stocks மூலம் கிடைக்கும் வருமான அளவு
Demand அடிப்படையில் income மாறும்:
- குறைந்த demand → ₹3,000 – ₹6,000
- நடுத்தர demand → ₹8,000 – ₹15,000
- அதிக demand → ₹20,000 – ₹40,000+
👉 இதனால் இது ஒரு strong passive income engine.
Rent Stocks நன்மைகள்
- Shares sell செய்யாமல் income
- Passive Income source
- Portfolio utilization அதிகரிக்கும்
- High return potential
- Low effort earning
Rent Stocks தீமைகள்
- Return fixed இல்லை (demand based)
- Lock-in period இருக்கலாம்
- Market risk இருக்கும்
- எல்லா stocks-க்கும் demand இருக்காது
👉 அதனால் இது low risk, ஆனால் risk-free இல்லை
யார் இதை பயன்படுத்த வேண்டும்?
- Long-term investors
- Idle portfolio வைத்திருப்பவர்கள்
- Extra income தேடுபவர்கள்
Opportunity பயன்படுத்திக்கொள்ள வேண்டுமா?
பங்குகளை வாங்கி வைத்திருப்பது மட்டும் போதாது. அதை income generate செய்யும் asset ஆக மாற்றுவது தான் smart investing.
Rent Stocks மூலம்:
- Passive Income
- Earn Money regularly
- Low Effort income stream
ஆரம்பிக்க சிறந்த platform:
👉 Dhan App
Disclaimer
இந்த பதிவு கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும். வருமானம் சந்தை நிலைமைகளைப் பொறுத்து மாறும்.

0 Comments: