இதுவரை சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி பார்த்தோம்.
இப்போது ஒரு முக்கியமான கேள்வி.
"என்னிடம் இருக்கும் பணத்தை எங்கு வைக்கலாம்?"
இன்று நமக்கு பல வழிகள் இருக்கின்றன.
சில வழிகள் பாதுகாப்பானவை.
சில வழிகள் பணத்தை வேகமாக வளர்க்கும்.
சில வழிகளில் லாபமும் அதிகம், ஆபத்தும் அதிகம்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. வீட்டில் பணம் வைத்திருப்பது
பல குடும்பங்களில் இன்னும் வீட்டில் பணம் வைத்திருக்கும் பழக்கம் இருக்கிறது.
உதாரணமாக:
₹50,000-ஐ வீட்டில் வைத்தால்,
ஒரு வருடம் கழித்தும் அது ₹50,000 தான்.
5 வருடம் கழித்தும் அது ₹50,000 தான்.
நன்மை
- எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
குறை
- பணம் வளராது.
- திருட்டு அல்லது இழப்பு அபாயம் உள்ளது.
வளர்ச்சி
❌ இல்லை
ஆபத்து
🟡 மிதமானது
2. வங்கி சேமிப்பு கணக்கு
சம்பளம் வந்ததும் அல்லது பணம் கிடைத்ததும் பெரும்பாலான மக்கள் வங்கியில் வைப்பார்கள்.
நன்மை
- பாதுகாப்பாக இருக்கும்.
- எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.
குறை
- வளர்ச்சி மிகவும் குறைவு.
- அதிகபட்சம் 3% வரை வட்டி கிடைக்கலாம்
உதாரணம்
₹1,00,000 வைத்தால் ஒரு வருடம் கழித்து சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கூடலாம்.
வளர்ச்சி
🟢 குறைவு
ஆபத்து
🟢 மிகவும் குறைவு
3. Fixed Deposit (FD)
வங்கியிடம்,
"இந்தப் பணத்தை சில வருடங்களுக்கு நான் எடுக்க மாட்டேன்"
என்று சொல்லி வைப்பது.
நன்மை
- முன்கூட்டியே வட்டி தெரியும்.
- பாதுகாப்பானது.
குறை
- அதிக வளர்ச்சி கிடைக்காது.
- ஆண்டுக்கு 7% முதல் 8% வட்டி கிடைக்கும்
வளர்ச்சி
🟢 மிதமானது
ஆபத்து
🟢 குறைவு
4. தங்கம்
தமிழகத்தில் பலர் தங்கத்தை சேமிப்பாக நினைக்கிறார்கள்.
நன்மை
- நீண்ட காலத்தில் மதிப்பு உயர வாய்ப்பு உண்டு.
- அவசர காலத்தில் அடகு வைக்கலாம்.
குறை
- ஒவ்வொரு வருடமும் ஒரே அளவு வளராது.
உதாரணம்
10 வருடங்களுக்கு முன் வாங்கிய தங்கத்தின் விலை இன்று பல மடங்கு உயர்ந்திருக்கலாம்.
வளர்ச்சி
🟡 மிதமானது
ஆபத்து
🟡 மிதமானது
5. PPF
இது அரசாங்கத்தின் நீண்டகால சேமிப்பு திட்டம்.
இதில் பணம் போட்டால் அரசாங்கம் வட்டி தரும்.
நன்மை
- பாதுகாப்பு அதிகம்.
- நீண்டகால சேமிப்புக்கு நல்லது.
குறை
- உடனே பணம் எடுக்க முடியாது.
வளர்ச்சி
🟢 மிதமானது
ஆபத்து
🟢 மிகவும் குறைவு
6. Mutual Fund
ஒருவரிடம் ₹500, மற்றொருவரிடம் ₹1,000, இன்னொருவரிடம் ₹5,000.
இப்படி ஆயிரக்கணக்கான மக்களின் பணத்தை ஒன்றாக சேர்த்து முதலீடு செய்வதுதான் Mutual Fund.
அந்தப் பணத்தை நிபுணர்கள் நிர்வகிப்பார்கள்.
நன்மை
- சிறிய தொகையில் தொடங்கலாம்.
- மாதம் மாதம் முதலீடு செய்யலாம்.
குறை
- லாபம் உறுதி இல்லை.
- சில நேரங்களில் மதிப்பு குறையலாம்.
உதாரணம்
மாதம் ₹1,000 தொடர்ந்து பல வருடங்கள் முதலீடு செய்தால் நல்ல வளர்ச்சி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சி
🟠 அதிகம்
ஆபத்து
🟡 மிதமானது
7. ETF
ETF-ஐ ஒரு பழக்கூடை போல நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கூடையில்:
- ஆப்பிள்
- ஆரஞ்சு
- மாம்பழம்
எல்லாம் இருப்பது போல,
ETF-ல் பல பெரிய நிறுவனங்கள் இருக்கும்.
ஒரே ETF வாங்கினால் பல நிறுவனங்களில் சிறிய பங்கு வாங்கியதுபோல் ஆகிவிடும்.
நன்மை
- பல நிறுவனங்களில் ஒரே நேரத்தில் முதலீடு.
- ஆபத்து ஓரளவு குறையும்.
குறை
- சந்தை சரிந்தால் இதுவும் சரியும்.
வளர்ச்சி
🟠 அதிகம்
ஆபத்து
🟡 மிதமானது
8. NIFTY 50
இது முதலீட்டு பொருள் அல்ல.
இது இந்தியாவின் 50 பெரிய நிறுவனங்களின் பட்டியல்.
உதாரணமாக:
- பெரிய வங்கிகள்
- பெரிய IT நிறுவனங்கள்
- பெரிய தொழில் நிறுவனங்கள்
இவற்றை சேர்த்து உருவாக்கப்பட்ட பட்டியல்தான் NIFTY 50.
NIFTY 50-ஐ அடிப்படையாக வைத்து ETF மற்றும் Mutual Fund-கள் உருவாக்கப்படுகின்றன.
9. பங்கு சந்தை
ஒரு நிறுவனத்தின் பங்கை நேரடியாக வாங்குவது.
உதாரணமாக,
ஒரு நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரராக மாறுகிறீர்கள்.
நன்மை
- அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு.
குறை
- தவறான நிறுவனம் தேர்வு செய்தால் நஷ்டமும் அதிகம்.
வளர்ச்சி
🔴 மிகவும் அதிகம்
ஆபத்து
🔴 மிகவும் அதிகம்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
பாதுகாப்பு அதிகமான இடங்களில் வளர்ச்சி குறைவாக இருக்கும்.
வளர்ச்சி அதிகமான இடங்களில் ஆபத்தும் அதிகமாக இருக்கும்.
அதனால் புத்திசாலித்தனமான நபர்கள் எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் வைக்க மாட்டார்கள். சில பணத்தை சேமிப்பாகவும், சில பணத்தை முதலீடாகவும் வைத்திருப்பார்கள்.
அடுத்த பதிவு #4
கூட்டு வட்டி என்றால் என்ன?
₹1,000 எப்படி ₹10,000 ஆக மாறுகிறது?
பணம் நமக்காக வேலை செய்வது எப்படி?
எளிய உதாரணங்களுடன் பார்க்கலாம்.
