நான் 40 சென்ட் நிலத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறேன். தற்போது 6 நாட்களாக காய் அறுத்து கேரளா சந்தைக்கு அனுப்பி வருகிறேன். காய்கள் வீட்டுக்கே வந்து எடை போட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள், காலை 7 மணி முதல் 10 மணி வரை காய் அறுப்பேன்.
இந்த 6 நாட்களில் கிடைத்த கிலோ விலை:
- ₹28
- ₹18
- ₹14
- ₹15
- ₹23
- ₹31
ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.
👉 கடந்த ஆண்டு இதே வயலில் ஒரு அறுப்புக்கு 80 முதல் 120 கிலோ வரை மகசூல் கிடைத்தது. இந்த ஆண்டு அந்த அளவுக்கு காய் பிடிப்பு இல்லை. இருந்தாலும் தற்போது இளம் செடி என்பதால் காய் பிடிப்பு குறைவாக இருக்கலாம், இன்னும் 10 நாட்கள் பிறகு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் அடுத்த UPDATES தெரிந்து கொள்ள நமது WHATS APP சேனலை FOLLOW செய்யவும். 👉https://whatsapp.com/channel/0029Vb6mw80FHWqAmufH1u3P
இந்த ஆண்டு மகசூல் குறைய காரணம் என்ன?
முக்கிய காரணங்கள்:
1) அதிக பனி மற்றும் ஈரப்பதம்
இந்த ஆண்டு பனிக்காலத்தில்:
- காலை நேரத்தில் பனி நீண்ட நேரம் நிலத்தில் நிற்கிறது
- ஈரப்பதம் அதிகமாக இருப்பதால்
- பூ உதிர்வு
- காய் பிடிப்பு குறைவு
- பூச்சி மற்றும் பூஞ்சை நோய்கள் அதிகம்
2) மழை / மலை காலங்களில் என்ன நடக்கும்?
மலை மற்றும் பனிக்காலங்களில்:
- செடி வளர்ச்சி இருக்கும்
- ஆனால் காய் பிடிப்பு குறையும்
- இலை சுருட்டு, துரு, மொசைக், பூ உதிர்வு அதிகம் வரும்
👉 இந்த காலங்களில் மருந்து செலவு தவிர்க்க முடியாது.
எந்த மாதங்களில் பனி / மலை அதிகம்?
பொதுவாக:
- நவம்பர் – ஜனவரி : பனிக்காலம்
- ஜூன் – ஆகஸ்ட் : மலை / ஈரப்பதம் அதிகம்
இந்த மாதங்களில் அதிக மகசூல் எதிர்பார்க்க முடியாது, செலவு மட்டும் அதிகமாகும், விலை இருந்தாலும் மகசூல் இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகம்.
இதுவரை செய்த செலவுகள் (உண்மை கணக்கு)
விதை விதைத்த நாளிலிருந்து இப்போது வரை:
- 7 முறை மருந்து தெளிப்பு
- 3 முறை உரம் தண்ணீரில் கலந்து பாய்ச்சி இருக்கேன்
ஒரு முறை மருந்து வாங்கினால் சராசரியாக ₹500
7 முறை × ₹500 = ₹3,500 (மருந்து செலவு மட்டும்)
👉 இது இதுவரை மட்டும்.
இன்னும் எவ்வளவு செலவு ஆகலாம்?
வெண்டைக்காய் சாகுபடியில் ஒரு பயிருக்கு 30 முதல் 40 அறுப்பு வரை அறுக்கலாம். ஒரு அறுப்புக்கு ஒரு முறை மருந்து அவசியம் இல்லையென்றாலும், பொதுவாக 2–3 அறுப்புக்கு ஒரு முறை மருந்து அவசியம்.
அப்படி பார்த்தால்:
- இன்னும் 8 முதல் 12 முறை மருந்து தெளிக்க வேண்டிய நிலை வரலாம்
அதாவது:
- 10 முறை × ₹500 = ₹5,000
- மொத்த மருந்து செலவு மட்டும்:
- 👉 ₹3,500 + ₹5,000 = ₹8,500 வரை
இதில்:
- உரம்
- கூலி( நான் மற்றும் எனது அம்மா )
- தண்ணீர்( சொந்த கிணறு இலவச மின்சாரம் )
- பராமரிப்பு ( பெரிதாக தேவை இல்லை )
இவை சேரவில்லை. ஆனால் ஒருசிலருக்கு இவரை செலவுகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வரலாம்.
சரியான பட்டத்தில் விதைப்பு எது?
வெண்டைக்காய்க்கு பொதுவாக சரியான பட்டம்:
- ஆடி – புரட்டாசி
- மாசி – பங்குனி
இந்த காலங்களில்:
- பனி குறைவு
- பூ உதிர்வு குறைவு
- காய் பிடிப்பு நல்லது
👉 நவம்பர் – ஜனவரி விதைப்பு செய்தால்
மகசூல் குறைவாக வரும் அபாயம் அதிகம்.
பொங்கல் போன்ற தொடர் விடுமுறை – விலை நிலை
அடுத்தடுத்து பொங்கல் போன்ற தொடர் விடுமுறை வருவதால்:
- மார்கெட் வரத்து குறையும்
- வியாபாரிகள் வாங்கும் அளவும் குறையும்
- விலை உயரும் அல்லது திடீரென விழும் – இரண்டும் நடக்கலாம்
👉 விவசாயிக்கு இதில் எந்த உறுதியும் இல்லை.
இறுதி உண்மை
வெண்டைக்காய் சாகுபடி:
- அதிக உழைப்பு
- தொடர்ச்சியான செலவு
- முழுக்க காலநிலை மற்றும் மார்கெட் மீது நம்பிக்கை
மகசூல் இருந்தாலும் விலை இல்லை என்றால் பயன் இல்லை.
விலை இருந்தாலும் மகசூல் இல்லை என்றால் லாபம் இல்லை.
இது கணக்கு போட்டு சொன்னது இல்லை.
நிலத்தில் நின்று பார்த்த அனுபவம்.
நான் 40 சென்ட் நிலத்தில் வெண்டைக்காய் சாகுபடி ஆண்டுக்கு ஒருமுறை செய்து வருகிறேன், சென்ற ஆண்டு இதில் 75 ஆயிரம் வரை லாபம் கிடைத்தது, அனால் இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்பு இல்லை, விவசாயம் என்றலே இப்படித்தான் நடக்கும், இதில் நாம் யாரையும் குறை கூற முடியாது.

0 Comments