காப்பீடு என்றால் முதலீடு ஏற்று சிலர் கருதிக்கொண்டு இதை தள்ளிவைக்கின்றார்கள், ஆனால் காப்பீடு என்பது ஒரு குடும்பத்தின் நிதி பாதுகாப்பு என்பதை அனைவரும் புரிந்துகொள்வதில்லை, இந்த பதிவில் இதைப்பற்றி சுருக்கமாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்.
காப்பீடு என்றால் என்ன?
வாழ்க்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் தவிர்க்க முடியாத பெரிய அளவிலான செலவுகளுக்கு முன்கூட்டிய நம்மை தயார்செய்வது தான் காப்பீடு. இதன் மூலம் அப்போது ஏற்ப்படும் பெரிய செலவுகளை எளிமையாக கையாளமுடியும் என்பதை நாம் உணரவேண்டும்.
உதாரணமாக:-
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கோ அல்லது உங்களது குடும்ப உறுப்பினருக்கோ ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யவேண்டி வருவதாக எடுத்துக்கொள்வோம், தற்போது இருக்கும் மருத்துவ செலவுகள் அணைத்தும் வருங்காலங்களில் உயர்ந்து கொண்டு தான் போகுமோ தவிர குறையாது, எனவே இப்போது 5 லட்சம் தேவை என்றால் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 7 முதல் 8 லட்சம் தேவைப்படலாம்.
அப்போது நீங்கள் உங்களது நகைகளை அடமானம் வைத்தோ அல்லது விற்றோ பணத்தை தயார்செய்யலாம், ஆனால் உங்களிடம் நகைகள் இருந்தால் சாத்தியம். உங்களிடம் சேமிப்பு இருந்தால் அதை பயன்படுத்தலாம் இல்லை என்றால் கடன் வாங்குவதை தவிர வேறு வழி இல்லை.
சரி நீங்கள் 7 லட்சம் கடன் வாங்கி செலவு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு யார் கடன் கொடுப்பார்கள்? ஒரு வங்கியிடமோ அல்லது சிறு பைனான்சியல் நிறுவனத்திடமோ கடன் வாங்கலாம், இதற்க்கு உங்களுக்கு சிபில் நன்றாக இருக்க வேண்டும், மாத வருமானம் இருக்க வேண்டும், இவை அடிப்படியாக கொண்டு தான் உங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்படும், இது அனைவருக்கும் சாத்தியமில்லை.
ஒரு தனி நபரிடம் கடன் வாங்கலாம், இந்தியாவில் அதும் தமிழ்நாட்டில் இதுபோல தனி நபரிடம் கடன் வாங்கினாலும் யாரும் வட்டி இல்லாமல் கொடுக்க மாட்டார்கள், குறைந்தது 2ரூபாய் வட்டியாவது இருக்கும், 1 லட்சத்திற்கு வருடம் 24ஆயிரம் வட்டி ஆகும், அப்போது 7 லட்சத்திற்கு 168000 ரூபாய் வட்டி ஆகும், நீங்கள் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருக்க முடியும், அசல் குறிப்பது மிகவும் கடினம், சில நேரங்களில் 1 ஆண்டு வட்டி கட்டவில்லை என்றால் அந்த தொகை அசலுடன் சேர்க்கப்படும், அடுத்த ஆண்டு முதல் 868000 என்ற தொகைக்கு வட்டி கணக்கிடுவார்கள், நமது ஊரில் பலர் ஏழையாக இருக்க காரணமே இதுதான்.
இதுவே நீங்கள் ஒரு காப்பீடு எடுத்து வைத்திருந்தால் 70 முதல் 100% மருத்துவ செலவுகளைம் எளிதாக அதை வைத்து கட்டிக்கொள்ள முடியும், யாரிடமும் கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லை, சரி காப்பீட்டு வகைகள் மற்றும் யாருக்கு எது தேவை என்பதையும் கீழே பார்க்கலாம்.
காப்பீட்டு வகைகள்
இதில் சராசரி மனிதர்களுக்கு தேவையானதை மட்டும் கொடுக்கிறேன்
- மருத்தவ காப்பீடு
- வாகன காப்பீடு
- விபத்து காப்பீடு
மருத்தவ காப்பீடு
வாகன காப்பீடு
விபத்து காப்பீடு
விபத்து காப்பீடு ஒவ்வொரு குடும்ப தலைவருக்கும் அவசியமானது ஆகும், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, ஒரு விபத்து காப்பீடு எடுத்து வைத்திருந்தால் அந்த சமையத்தில் ஏற்படும் பெரிய செலவுகளை அது குறைத்து கொடுக்கும்.
நீங்கள் எடுக்கும் காப்பீடானது மாதம் 2000கும் கீழ் தான் இருக்க போகிறது, எவ்வளவோ செலவுகளை நாம் செய்கிறோம், நமது உடல்நிலை மற்றும் குடுப்பத்திற்க முன்கூட்டிய இதுபோன்ற காப்பீட்டை எடுத்து வைத்திருந்தால் வருங்காலங்கள் மென்மையாகவும் கடன் சுமை இல்லாமலும் செல்லும் வாய்ப்பை கொடுக்கிறது.

0 Comments