Advertisement

50 Business Ideas for Women to Start in 2026 in Tamil | Home & Small Business – thodar.in

    2026-ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவும் குறிப்பாக தமிழ்நாடும் வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. வேலை வாய்ப்புகள் குறையும் சூழலில், குடும்ப செலவுகள் அதிகரிக்கும் நிலையில், பெண்களுக்கு business ideas for women என்ற தேடல் நாளுக்கு நாள் அதிகமாகிறது.

இன்று படித்த பெண்கள், படிக்காத பெண்கள், திருமணமான பெண்கள், வயதான பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் சுயதொழில் வாய்ப்புகள் இருக்கின்றன.

முன்பு “வேலை கிடைத்தால் போதும்” என்ற நிலை இருந்தது.
இன்று “நாமே ஒரு small business start பண்ணலாமே?” என்ற எண்ணம் பெண்களிடம் உருவாகி வருகிறது.
இதற்கு காரணம் –

  • வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதி
  • online & home based business வளர்ச்சி
  • அரசு பெண்களுக்கு வழங்கும் மானியம், பயிற்சி, கடன் சலுகைகள்

இந்த தொடர் கட்டுரையில், Tamil Nadu பெண்களுக்கு உண்மையில் சாத்தியமான, லாபம் தரும், நீண்ட காலம் நிலைத்திருக்கும் business ideas பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

Small Business Ideas for Women to Start in 2026
50 Business Ideas for Women to Start in 2026

பெண்கள் ஏன் சுயதொழில் செய்ய வேண்டும்?

1. பொருளாதார சுதந்திரம்

பெண் ஒருத்தி வருமானம் ஈட்ட ஆரம்பித்தால், அது அவளுக்கு மட்டுமல்ல; அவள் குடும்பத்திற்கே ஒரு பாதுகாப்பு. சுயதொழில் பெண்களுக்கு நிதி சுந்திரம் கொடுக்கிறது.

2. வீட்டையும் வேலையையும் சமநிலைப்படுத்த முடியும்

     பல பெண்களுக்கு முழுநேர வேலை சாத்தியமில்லை. அதனால்தான் home business ideas for women இன்று அதிகமாக தேடப்படுகிறது.

  • குழந்தைகளை பார்த்துக்கொண்டே
  • பெற்றோரை கவனித்துக்கொண்டே
  • வீட்டிலிருந்தே online business செய்ய முடிகிறது

3. அனுபவம் இல்லாமலே தொடங்கலாம்

     “எனக்கு experience இல்லையே” என்பது மிகப்பெரிய பயம். ஆனால் இன்று business ideas for women without experience என்ற வகையில் பல தொழில்கள் உள்ளன.
பயிற்சி + practice = success ஆக மாறும், அதற்க்கு முன் முதல் படியை எடுத்து வைக்கணும்.

4. சமூகத்தில் மதிப்பு & தன்னம்பிக்கை

      ஒரு பெண் entrepreneur ஆன பிறகு, அவளுக்கான மரியாதையும் தன்னம்பிக்கையும் இயல்பாக அதிகரிக்கிறது. அது அவள் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல உதாரணம்.

தமிழ்நாடு – பெண்கள் சுயதொழிலுக்கு ஏற்ற மாநிலமா?

ஆம், 100% ஏற்ற மாநிலம்.

காரணங்கள்:

  • Self Help Group (SHG) அமைப்புகள்
  • Panchayat & District level support
  • Tamil Nadu அரசு பெண்களுக்கு தனி திட்டங்கள்
  • Urban + Rural market availability

தமிழ்நாட்டில்:

  • உணவு சார்ந்த தொழில்கள்
  • Handmade products
  • Agriculture & allied business
  • Service based & online business

இவை எல்லாமே நல்ல வளர்ச்சியில் இருக்கிறது.

பெண்கள் எந்த எந்த பிரிவில் business start செய்யலாம்?

இந்த தொடர் கட்டுரையில் நாம் கவனிக்கப்போகும் பெண்கள்:

  • படித்த பெண்கள்
  • படிக்காத / குறைந்த கல்வி பெண்கள்
  • திருமணமான பெண்கள் / housewives
  • வயதான பெண்கள்
  • மாற்றுத்திறனாளி பெண்கள்

ஒவ்வொரு category-க்கும் ஏற்ற small business ideas for women, online businesses for women, agriculture business ideas for women ஆகியவற்றை தனித்தனியாக பார்க்கப் போகிறோம்.

அரசு பெண்களுக்கு தரும் ஆதரவு – ஒரு பார்வை

    பெண்கள் சுயதொழில் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு வெறும் பேச்சில் மட்டுமல்ல; நேரடி உதவிகளும் செய்கிறது.

அரசு ஆதரவுகள் என்றால் என்ன?

  • குறைந்த வட்டி கடன்
  • மானியம் (Subsidy)
  • இலவச / குறைந்த கட்டண பயிற்சி
  • மார்க்கெட்டிங் உதவி
  • Online selling platform support

பல பெண்கள் இந்த வாய்ப்புகளை சரியாகத் தெரியாமல் விட்டுவிடுகிறார்கள்.
இந்த தொடரில், ஒவ்வொரு business idea-க்கும் பொருந்தும் அரசு திட்டங்களையும் நாம் தெளிவாகப் பார்க்கப் போகிறோம்.

இந்த தொடரில் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?

இந்த 50 Business Ideas for Women to Start in 2026 – Tamil தொடரில்:

✔ உண்மையில் நடைமுறை சாத்தியமான ideas
✔ அதிக hype இல்லாத, real demand உள்ள தொழில்கள்
✔ Startup cost & profit margin பற்றி உண்மை தகவல்
✔ Where to sell – local, online, social media
✔ Government schemes & subsidy details
✔ Experience இல்லாத பெண்களுக்கும் ஏற்ற business

முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது

  • எல்லா business-மும் எல்லாருக்கும் பொருந்தாது
  • உங்களுடைய:

  1. வயது
  2. குடும்ப சூழல்
  3. நேரம்
  4. உடல் நிலை
  5. முதலீட்டு திறன்

இவைகளுக்கு ஏற்ப சரியான business idea தேர்வு செய்தால் தான் வெற்றி.

Small & Home Based Business Ideas for Women

1. Home Based Catering Business

   இந்த தொழிலை தொடங்குவதற்கு பெரிய சமையல் பட்டம் அல்லது ஹோட்டல் அனுபவம் எதுவும் தேவையில்லை. உங்களுக்கு சமைக்க தெரிந்தால் மட்டும் போதும். இன்று தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், PG-யில் தங்கும் இளைஞர்கள், bachelor-க்கள் என பலரும் வீட்டுச் சாப்பாட்டை விரும்பி தேடுகிறார்கள். ஹோட்டல் சாப்பாட்டை தினமும் சாப்பிட முடியாத சூழலில், வீட்டு சாப்பாடு என்பதே பெரிய நம்பிக்கையாக மாறியுள்ளது.

Unique business ideas for women Tamil
Home Based Catering Business ideas for women

இந்த business-ஐ முழுக்க வீட்டிலிருந்தே தொடங்கலாம். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் offices, PG / bachelors, construction site, small companies போன்ற இடங்களுக்கு காலை, மதியம், இரவு உணவு செய்து கொடுக்கலாம். ஆரம்பத்தில் ஒரே நேர சாப்பாட்டை மட்டும் எடுத்துக்கொண்டு தொடங்கினாலும் போதும். புளி சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், பருப்பு சாதம், இட்லி, தோசை போன்ற குறைந்த செலவில் செய்யக்கூடிய உணவுகள் இந்த தொழிலுக்கு மிகவும் ஏற்றவை.

  • ஆரம்ப முதலீடு: ₹5,000 – ₹15,000
  • சாத்தியமான வருமானம்: மாதம் ₹20,000 – ₹60,000

இந்த தொழிலை திருமணமான பெண்கள், housewife-க்கள், சமையல் திறன் உள்ள பெண்கள் அனைவரும் செய்யலாம். மேலும் SHG loan, Mudra Shishu loan போன்ற அரசு உதவிகளும் கிடைக்கின்றன.

2. Home Based Bakery Business

     Cake செய்ய தெரிந்த பெண்களுக்கு home based bakery business ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். Birthday, anniversary, குழந்தை பிறந்த நாள், office celebration போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் cake இல்லாமல் நடப்பதில்லை. அதனால் bakery business-க்கு எப்போதும் நிலையான demand உள்ளது.

50 Profitable Business Ideas for Women
Home Based Bakery Business ideas for women

இந்த தொழிலை வீட்டிலேயே தொடங்கலாம். ஒரு small oven மற்றும் basic baking tools இருந்தாலே போதும். ஆரம்பத்தில் friends circle, neighbours, WhatsApp status மூலமாகவே orders வர ஆரம்பிக்கும். Quality நல்லதாக இருந்தால் word of mouth மூலமாக business வேகமாக வளர்ந்து விடும்.

  • முதலீடு: ₹10,000 – ₹25,000
  • ஒரு cake-க்கு சாத்தியமான லாபம்: ₹400 – ₹800

Housewife-க்கள், இளம் பெண்கள், சமையல் மற்றும் baking-ல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான business idea.

3. Tailoring & Alteration Service

      Tailoring என்பது எப்போதும் முடங்காத business. புதிய dress வாங்கினாலும் stitching தேவைப்படும், பழைய dress இருந்தாலும் alteration தேவைப்படும். அதனால் இந்த தொழிலுக்கு காலம் கடந்தும் demand குறையாது.

Women Entrepreneurship 2026
Tailoring & Alteration Service Business ideas for women

இந்த business-ஐ வீட்டிலிருந்தே தொடங்கலாம். வீட்டின் முன்பு ஒரு small board வைத்தாலே போதும். neighbours, relatives, word of mouth மூலமாகவே வேலை கிடைக்கும். பெரிய shop அல்லது rent செலவு தேவையில்லை.

  • Sewing machine முதலீடு: ₹8,000 – ₹20,000

இந்த தொழில் படிக்காத பெண்கள், கிராம பெண்கள், வயதான பெண்கள் என அனைவருக்கும் ஏற்றது. ஒருமுறை customer set ஆன பிறகு, தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்கும்.

4. Aari / Embroidery Work

    Aari work என்பது skill அடிப்படையிலான home business. Blouse, bridal wear, designer dress போன்றவற்றுக்கு embroidery வேலைக்கு எப்போதும் நல்ல demand இருக்கும். ஒரு blouse-க்கு ₹1,500 முதல் ₹5,000 வரை charge செய்ய முடியும் என்பதால் வருமான வாய்ப்பு அதிகம்.

Which business is best for the future for women?
Aari / Embroidery Work Self-Employment
இந்த தொழிலை boutique owners-களுடன் tie-up செய்து செய்யலாம் அல்லது Instagram மூலம் direct orders எடுக்கலாம். ஆரம்பத்தில் frame, needle, thread போன்ற basic items இருந்தாலே போதும்.

  • முதலீடு: ₹3,000 – ₹8,000

Patience மற்றும் creativity உள்ள பெண்கள், வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த self employment option.

5. Handmade Jewellery Business

    Terracotta jewellery, thread jewellery, bead jewellery போன்ற handmade ornaments-க்கு இன்றைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இளம் பெண்கள் handmade jewellery-ஐ விரும்பி வாங்குவதால் இந்த business-க்கு நல்ல சந்தை உருவாகியுள்ளது.

Handmade Jewellery Business for Women in Tamil Nadu
Handmade Jewellery Business for Women in Tamil Nadu 

இந்த தொழிலை வீட்டிலிருந்தே செய்யலாம். Raw materials வாங்கி jewellery தயாரித்து Instagram, WhatsApp groups, local exhibitions மூலம் விற்பனை செய்ய முடியும். ஆரம்பத்தில் அதிக stock வைத்திருக்க தேவையில்லை; order வந்த பிறகு தயாரித்தாலே போதும்.

  • முதலீடு: ₹3,000 – ₹10,000

Creativity உள்ள பெண்கள், young women, வீட்டிலிருந்து online business செய்ய விரும்பும் பெண்களுக்கு இது ஒரு நல்ல option.

6. Candle Making Business

    Candle making என்பது குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய ஒரு சிறந்த business idea. முன்பெல்லாம் மெழுகுவர்த்தி என்றால் மின்சாரம் போனால் மட்டும் பயன்படுத்தும் பொருளாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் decorative candles, scented candles, birthday candles, return gift candles என பல வகைகளில் demand உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு இது ஒரு நல்ல self employment வாய்ப்பாக மாறியுள்ளது.

Candle Making Business for Women – Low Investment Home Based Business Idea in Tamil Nadu

இந்த தொழிலை தொடங்குவதற்கு பெரிய இடம் தேவையில்லை. வீட்டில் ஒரு சின்ன இடம் இருந்தாலே போதும். மெழுகு, வாசனை essence, moulds போன்ற basic raw materials வாங்கினால் ஆரம்பிக்கலாம். ஒருமுறை தயாரிப்பு முறையை கற்றுக்கொண்டால், தொடர்ந்து ஒரே மாதிரி quality-யில் candles தயாரிக்க முடியும்.

  • ஆரம்ப முதலீடு: ₹5,000 – ₹12,000
  • விற்பனை செய்யக்கூடிய இடங்கள்: birthday functions, marriage events, gift shops, online orders

Housewife-க்கள், young women, வீட்டிலிருந்து creative work செய்ய விரும்பும் பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமான தொழிலாக இருக்கும்.

7. Soap & Detergent Making Business

     Soap மற்றும் detergent என்பது தினமும் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பதால், இந்த தொழிலுக்கு எப்போதும் demand இருக்கும். “எனக்கு அனுபவம் இல்லை” என்று நினைக்கும் பெண்களுக்கும் இந்த business மிகவும் ஏற்றது. காரணம், குறுகிய கால பயிற்சி எடுத்தாலே இந்த தொழிலை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.

Soap and detergent making business for women in Tamil Nadu 2026

வீட்டிலேயே soap, detergent powder, liquid detergent போன்றவற்றை தயாரிக்கலாம். ஆரம்பத்தில் local area-வில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு தயாரித்தாலே போதும். Raw materials, moulds, packing cover ஆகியவற்றுக்கான செலவு அதிகமாக இருக்காது.

  • முதலீடு: ₹5,000 – ₹10,000
  • விற்பனை: local shops, apartment residents, neighbours, SHG network

Repeat customers கிடைப்பது இந்த business-ன் மிகப்பெரிய பலம். அதனால் இது business ideas for women without experience என்ற category-க்கு மிகச் சிறந்த உதாரணம்.

8. Pickle & Masala Powder Business

     தமிழ்நாட்டில் ஊறுகாய் மற்றும் மசாலா பொடி என்றாலே வீட்டு தயாரிப்புக்குத்தான் மதிப்பு அதிகம். “அம்மா கைமணம்” என்ற பெயரிலேயே இந்த products விற்பனையாகும். அதனால் இந்த தொழிலை வீட்டிலிருந்தே தொடங்கும் பெண்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

Pickle & Masala Powder Business Ideas for Women to Start in 2026

மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், பூண்டு ஊறுகாய், சாம்பார் பொடி, ரசம் பொடி போன்றவற்றை சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்யலாம். ஆரம்பத்தில் neighbours, relatives, WhatsApp orders மூலமாகவே விற்பனை தொடங்கலாம்.

  • முதலீடு: ₹5,000 – ₹15,000
  • வெற்றிக்கான முக்கியம்: quality + cleanliness

ஒருமுறை customer set ஆன பிறகு தொடர்ந்து orders வரும். Housewife-க்கள் மற்றும் கிராம பெண்களுக்கு இது ஒரு நம்பகமான home business idea.

9. Papad / Vadagam Business

    Papad மற்றும் vadagam தயாரிப்பு என்பது பாரம்பரியமான தமிழ்நாட்டு தொழில். குறிப்பாக கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு இது மிகவும் ஏற்ற business idea. Summer season-ல் இந்த products-க்கு demand அதிகமாக இருக்கும்.

Papad / Vadagam Business Ideas for Women to Start in 2026

வீட்டின் மாடி, terrace அல்லது திறந்த வெளி இருந்தாலே இந்த தொழிலை தொடங்கலாம். அரிசி, உளுந்து, மிளகாய் போன்ற raw materials வாங்கி papad அல்லது vadagam தயாரிக்கலாம்.

  • ஆரம்ப முதலீடு: ₹3,000 – ₹8,000
  • விற்பனை: local provision stores, weekly markets, SHG network

Seasonal-ஆ இருந்தாலும், குறைந்த செலவில் நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாக இது இருக்கும்.

10. Tuition / Coaching at Home

       படித்த பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தரக்கூடிய business இது. இன்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டுக்கு அருகிலேயே tuition தேடுகிறார்கள். அதனால் home tuition-க்கு எப்போதும் demand இருக்கும்.

Tuition  Coaching at Home Business Ideas for Women to Start in 2026

School syllabus tuition, handwriting practice, basic maths, spoken English போன்றவற்றை வீட்டிலிருந்தே கற்றுக்கொடுக்கலாம். இந்த business-க்கு பெரிய முதலீடு தேவையில்லை. ஒரு board, சில books இருந்தாலே போதும்.

  • தொடக்க முதலீடு: Almost zero
  • பலம்: மாதந்தோறும் நிலையான income

Educated women, housewife-க்கள், part-time வேலை தேடும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த option.

11. Online Tuition / Online Coaching Business

      இன்றைய காலத்தில் tuition என்றால் கட்டாயமாக மாணவர்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்பதில்லை. Mobile phone, internet இருந்தாலே பெண்கள் வீட்டிலிருந்தே online tuition எடுக்க முடியும். குறிப்பாக தமிழ்நாட்டில் school students மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருக்கும் தமிழ் குடும்பங்களும் online classes-க்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

Online Tuition  Online Coaching Business Ideas for Women to Start in 2026

இந்த business-ஐ தொடங்குவதற்கு பெரிய முதலீடு தேவையில்லை. Maths, Science, Tamil, English, spoken English போன்ற பாடங்களை online-ஆ கற்றுக்கொடுக்கலாம்.

  • தேவையானவை: smartphone / laptop + நல்ல internet
  • சாத்தியமான வருமானம்: ₹15,000 – ₹50,000 / மாதம்

Teaching interest உள்ள பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமான online business idea.

12. YouTube Content Creation (Tamil)

      YouTube இன்று ஒரு entertainment platform மட்டும் இல்லை; அது ஒரு பெரிய business opportunity ஆகவும் மாறியுள்ளது. உங்களுக்கு சமையல், education, tailoring, beauty tips, daily vlog, village lifestyle போன்ற எந்த ஒரு விஷயத்தில் அறிவோ ஆர்வமோ இருந்தாலும், அதை video-வாக பகிரலாம்.

YouTube Content Creation Business Ideas for Women to Start in 2026

இந்த தொழிலை தொடங்க முதலீடு zero. ஆரம்பத்தில் mobile phone போதும். தொடர்ந்து quality content upload செய்தால் subscribers அதிகரிப்பார்கள்.

  • வருமானம்: ads + brand promotion
  • முக்கியம்: consistency + patience

Results கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும்; ஆனால் long-term-ஆ பார்க்கும்போது இது பெண்களுக்கு நல்ல online business option.

13. Instagram Page Business

      Instagram இன்று shopping platform ஆகவே மாறிவிட்டது. Boutique dress, jewellery, bags, home made products போன்றவற்றை Instagram page மூலம் பெண்கள் விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள். Shop தேவையில்லை, rent தேவையில்லை என்பதே இந்த business-ன் பெரிய பலம்.

Instagram Page Business Ideas for Women to Start in 2026
Instagram Page Small Business Ideas for Women to Start in 2026

இந்த business-ஐ தொடங்க, ஒரு Instagram page உருவாக்கி products-ஐ photo எடுத்து upload செய்ய வேண்டும். Orders direct message அல்லது WhatsApp மூலம் வரும்.

  • முதலீடு: மிகக் குறைவு
  • Suitable for: online selling-ல் ஆர்வம் உள்ள பெண்கள்

Stock குறைவாக வைத்துக்கொண்டு, மெதுவாக business-ஐ வளர்த்துக்கொள்ளலாம்.

14. WhatsApp Reselling Business

     இந்த தொழிலில் நீங்கள் product தயாரிக்க வேண்டியதில்லை, stock வைத்திருக்க வேண்டியதில்லை. Supplier-களிடமிருந்து product photos எடுத்து, உங்கள் WhatsApp status மற்றும் groups-ல் share செய்தாலே போதும். Customer order கொடுத்ததும் supplier product அனுப்புவார்.

WhatsApp Reselling Business Ideas for Women to Start in 2026

இதற்கு பெரிய முதலீடு தேவையில்லை. Mobile phone இருந்தாலே போதும். Saree, dress material, kitchen items, home products போன்றவை WhatsApp reselling-க்கு நல்ல choice.

  • முதலீடு: Almost zero
  • Suitable for: housewife-க்கள், part-time income தேடும் பெண்கள்

15. Blogging / Tamil Content Writing

எழுதும் ஆர்வம் உள்ள பெண்களுக்கு blogging ஒரு நல்ல online business. Tamil-ல் தகவல், அனுபவம், how-to articles எழுதுவதன் மூலம் readers-ஐ உருவாக்க முடியும். Cooking, education, health tips, women lifestyle போன்ற topics-ல் content எழுதலாம்.

Blogging  Tamil Content Writing Business Ideas for Women to Start in 2026

இந்த business-ல் ஆரம்பத்தில் வருமானம் மெதுவாக வரும். ஆனால் ஒரு முறை website-க்கு traffic வந்துவிட்டால் ads மற்றும் affiliate income மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும்.

  • பலம்: long-term passive income
  • Suitable for: educated women, writing interest உள்ளவர்கள்

16. Home Based Beauty Parlour

     Beauty parlour என்பது பெண்களுக்கே உரிய ஒரு strong business. ஆரம்பத்தில் பெரிய parlour அல்லது costly setup எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே facial, threading, waxing, bridal basic services போன்றவற்றை கொடுத்தாலே இந்த தொழிலை தொடங்க முடியும். குறிப்பாக neighbourhood-ல் அறிமுகம் ஏற்பட்டால், customer flow இயல்பாகவே உருவாகும்.

Home Based Beauty Parlour Business Ideas for Women to Start in 2026

இந்த business-க்கு ஒரு short-term training அவசியம். Training முடிந்த பிறகு basic equipment வாங்கி ₹15,000 – ₹30,000 முதலீட்டில் business ஆரம்பிக்கலாம். திருமண காலம் மற்றும் festival season-ல் income அதிகரிக்கும்.

  • Suitable for: housewife-க்கள், beauty field-ல் ஆர்வம் உள்ள பெண்கள்

17. Mehndi Artist Business

      Mehndi போடுவது ஒரு art. Wedding, engagement, festival, baby shower போன்ற நிகழ்ச்சிகளில் mehndi-க்கு எப்போதும் demand இருக்கும். இந்த தொழிலுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. Practice மற்றும் patience இருந்தாலே போதும்.

Mehndi Artist Business Ideas for Women to Start in 2026

Mehndi cones, design practice materials வாங்கி ₹2,000 – ₹5,000 முதலீட்டில் business தொடங்கலாம். One function-க்கு ₹2,000 முதல் ₹10,000 வரை கூட charge செய்ய முடியும். Young women மற்றும் creative interest உள்ள பெண்களுக்கு இது நல்ல part-time business.

18. Flower Making & Decoration Business

     Artificial flowers, garland making, simple decoration work ஆகியவை events-க்கு தேவையானவை. Wedding halls, birthday functions, small events ஆகியவற்றுக்கு இந்த decoration services தேவைப்படுகிறது.

Flower Making & Decoration Business Ideas for Women to Start in 2026

இந்த தொழிலை வீட்டிலிருந்தே தொடங்கலாம். Raw materials வாங்கி flower items தயாரிக்கலாம். Investment சுமார் ₹5,000 – ₹15,000. பெண்கள் குழுவாக சேர்ந்து செய்தால் income மேலும் அதிகரிக்கும். Creativity உள்ள பெண்களுக்கு இது ஒரு practical business idea.

19. Paper Bag & Eco-Friendly Products Business

     Plastic ban காரணமாக paper bag மற்றும் eco-friendly products-க்கு demand அதிகரித்து வருகிறது. Shops, hotels, grocery stores எல்லாம் paper bag தேடுகிறார்கள்.

Paper Bag & Eco-Friendly Products Business Ideas for Women to Start in 2026

இந்த business-ஐ வீட்டிலிருந்தே தொடங்கலாம். Paper cutting, bag making machine இல்லாமல்கூட ஆரம்பத்தில் கைமுறையாக செய்ய முடியும். Investment ₹5,000 – ₹10,000. Local shops-க்கு supply கொடுத்தால் regular income கிடைக்கும். Rural women மற்றும் SHG group-க்கு இது நல்ல business.

20. Agarbatti Making Business

Agarbatti என்பது தினமும் பயன்படும் பொருள். Temples, houses, shops எல்லாம் இதை பயன்படுத்துகின்றன. அதனால் demand எப்போதும் இருக்கும்.

Agarbatti Making Business Ideas for Women to Start in 2026

இந்த தொழிலை வீட்டிலிருந்தே தொடங்கலாம். Raw materials மற்றும் small machine வாங்கி ₹10,000 – ₹20,000 முதலீட்டில் business ஆரம்பிக்க முடியும். SHG support மற்றும் local market இருந்தால் தொடர்ந்து income கிடைக்கும். Village women மற்றும் housewife-க்களுக்கு இது ஒரு நம்பகமான business idea.

21. Home Based Day Care / Child Care Business

இன்று வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் அதிகரித்ததால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள day care தேவை அதிகமாகியுள்ளது. பெரிய school setup தேவையில்லை. உங்கள் வீட்டில் ஒரு பாதுகாப்பான, சுத்தமான இடம் இருந்தாலே இந்த business-ஐ தொடங்கலாம். ஆரம்பத்தில் 2–5 குழந்தைகள் போதும். உணவு, தூக்கம், basic activities எல்லாம் வீட்டுச் சூழலில் கிடைப்பதால் பெற்றோர்களுக்கு நம்பிக்கை உருவாகும். முதலீடு மிகக் குறைவு; mats, toys, safety items வாங்கினால் போதும். Housewife-க்கள், குழந்தைகளை நேசிக்கும் பெண்கள் இந்த தொழிலை நிம்மதியாக செய்யலாம். ஒருமுறை trust உருவானால், மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைக்கும்.

22. Elderly Care / Home Visit Care Service

     வயதான பெற்றோர்களை கவனிக்க வேலைக்கு செல்லும் குடும்பங்களுக்கு நேரம் கிடைக்காமல் போகிறது. அப்போது home visit care service மிகவும் உதவியாக இருக்கும். மருந்து கொடுத்தல், basic support, companion போல உடன் இருப்பது போன்ற சேவைகள் இதன் அடிப்படை. மருத்துவ பட்டம் அவசியமில்லை; மனிதநேயம், பொறுமை இருந்தால் போதும். முதலீடு almost zero. Local area-வில் word of mouth மூலமாகவே வேலை கிடைக்கும். வயதான பெண்கள், middle-aged women இந்த சேவையை part-time-ஆ தொடங்கலாம்.

23. Tailoring Training Center (Small Scale)

     ஏற்கனவே tailoring தெரிந்த பெண்கள், அதை அடுத்த கட்டமாக training business-ஆ மாற்றலாம். பெரிய institute தேவையில்லை. வீட்டிலேயே 5–10 மாணவிகளை எடுத்துக்கொண்டு basic tailoring, blouse stitching, alteration போன்றவற்றை கற்றுக்கொடுக்கலாம். மாதந்தோறும் course fee கிடைக்கும் என்பதால் income predictable-ஆ இருக்கும். Sewing machines ஏற்கனவே இருந்தால் முதலீடு குறையும். கிராமம் மற்றும் small town பெண்களுக்கு இது நல்ல வளர்ச்சி வாய்ப்பு தரும்.

24. Online Affiliate Marketing (Tamil Content Focus)

    Affiliate marketing என்றால் product-ஐ நேரடியாக விற்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் product link share செய்தால், அந்த link மூலம் sale ஆனால் commission கிடைக்கும். Cooking items, kitchen tools, women products போன்றவற்றை Tamil explanation-உடன் share செய்தால் நல்ல response கிடைக்கும்.

Blog, Instagram, WhatsApp status மூலமாக இதை செய்யலாம். முதலீடு மிகக் குறைவு; mobile phone இருந்தாலே போதும்.

  • பலம்: stock இல்லாத online income model

Patience இருந்தால் long-term-ஆ நல்ல வருமானம் கிடைக்கும்.

25. Digital Products Creation (Tamil Notes / PDFs)

      ஒரு விஷயத்தில் உங்களுக்கு நல்ல அறிவு இருந்தால், அதை digital product-ஆ மாற்றலாம். School notes, competitive exam basics, tailoring patterns, cooking recipe PDFs போன்றவை உதாரணம். ஒருமுறை தயாரித்தால், மீண்டும் மீண்டும் விற்க முடியும் என்பதே இதன் பலம். ஆரம்பத்தில் content உருவாக்க நேரம் தேவைப்படும்; ஆனால் printing, stock போன்ற செலவுகள் இல்லை. Educated women மற்றும் teaching mindset உள்ள பெண்களுக்கு இது நல்ல online business.

26. Rural Digital Services Center (Mini CSC Model)

      கிராமப்புறங்களில் online form filling, bill payment, ticket booking, government service assistance போன்ற சேவைகளுக்கு demand அதிகம். Computer basics தெரிந்த பெண்கள் வீட்டிலிருந்தே அல்லது ஒரு small room-ல் இந்த service center தொடங்கலாம். Printer, internet connection போன்றவற்றில் முதலீடு தேவைப்படும்; ஆனால் தினசரி small income சேர்ந்து மாதம் நல்ல தொகையாக மாறும். Rural women-க்கு இது practical business.

27. Home Based Ready-to-Cook Food Business

      இன்று பலர் சமையல் செய்ய நேரமில்லாமல் ready-to-cook options தேடுகிறார்கள். Idli/dosa batter, cut vegetables, ready masala packs போன்றவை இந்த business-க்கு உதாரணம். வீட்டிலேயே hygiene-ஆ தயாரித்து, nearby customers-க்கு supply செய்யலாம். முதலீடு moderate-ஆ இருக்கும்; ஆனால் repeat customers கிடைத்தால் income stable-ஆ இருக்கும். Housewife-க்களுக்கு இது ஒரு smart food business idea.

28. Event Support Services (Small Scale)

      Event-க்கு முழு decoration செய்ய முடியாவிட்டாலும், chairs arranging, simple stage support, welcome desk assistance போன்ற support services-க்கு demand இருக்கும். இந்த வேலைக்கு heavy investment தேவையில்லை. Local event organizers-களுடன் tie-up செய்தால் தொடர்ந்து calls வரும். Women group-ஆ சேர்ந்தால் வேலை சுலபமாகும். Occasional income-ஆ இருந்தாலும், festival season-ல் நல்ல லாபம் தரும்.

29. Home Based Laundry / Ironing Service

      Apartment areas-ல் laundry மற்றும் ironing service-க்கு நல்ல தேவை உள்ளது. Washing machine இருந்தால் advantage. Clothes pick-up & drop service கொடுத்தால் customers அதிகரிப்பார்கள். Investment medium-ஆ இருக்கும்; ஆனால் monthly recurring income கிடைக்கும். Housewife-க்கள் மற்றும் part-time income தேடும் பெண்களுக்கு இது ஒரு steady business.

30. Local Product Trading (Village to City Model)

     கிராமத்தில் கிடைக்கும் natural products—millets, நாட்டுச் சர்க்கரை, honey, handmade items—இவற்றை city customers-க்கு connect செய்யலாம். உற்பத்தி செய்ய வேண்டிய அவசியமில்லை; sourcing + selling தான் முக்கியம். WhatsApp, Instagram மூலம் orders எடுக்கலாம். முதலீடு sourcing-க்கு மட்டும் தேவைப்படும். Rural-urban connection தெரிந்த பெண்களுக்கு இது நல்ல growth potential கொண்ட business.

31. Mushroom Farming (Home / Small Scale)

Mushroom farming என்பது குறைந்த இடத்தில் தொடங்கக்கூடிய ஒரு நல்ல agriculture business idea. வீட்டின் பின்புறம் அல்லது ஒரு சிறிய room இருந்தாலே போதும். ஆரம்பத்தில் oyster mushroom போன்ற எளிதான வகையை தேர்வு செய்தால் பராமரிப்பும் சுலபமாக இருக்கும். இந்த தொழிலில் முக்கியமானது தொடர்ச்சியான உற்பத்தி மற்றும் சரியான ஈரப்பதம் பராமரிப்பு.

இந்த business-க்கு தேவையானவை மிகக் குறைவு:

  • Spawn மற்றும் growing bags
  • ஒரு சுத்தமான, காற்றோட்டம் உள்ள இடம்

Raw materials மற்றும் basic setup-க்கு ₹10,000 – ₹25,000 முதலீடு போதும். வாரந்தோறும் harvest கிடைப்பதால் cash flow தடைப்படாது. Hotels, catering services, local vegetable shops மற்றும் direct customers மூலமாக விற்பனை செய்யலாம். Housewife-க்கள் மற்றும் agriculture-ல் ஆர்வம் உள்ள பெண்களுக்கு இது நடைமுறையில் சாத்தியமான தொழில்.

32. Terrace Gardening & Plant Selling Business

     Terrace gardening இன்று நகரப்பகுதிகளில் ஒரு trend ஆக மாறியுள்ளது. ஆனால் பலருக்கு செடிகள் வளர்ப்பது எப்படி என்பதில் தெளிவு இல்லை. அந்த இடத்தில் பெண்கள் terrace garden setup மற்றும் plant selling business தொடங்கலாம். வீட்டிலேயே nursery மாதிரி செடிகளை வளர்த்து விற்பனை செய்ய முடியும்.

இந்த business-ல் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள்:

  • Kitchen garden plants விற்பனை
  • Grow bags, compost supply
  • Small terrace setup guidance

இதற்கான முதலீடு ₹5,000 – ₹15,000 வரை இருக்கும். Urban area-வில் demand அதிகம். Gardening-ல் ஆர்வம் உள்ள பெண்களுக்கு இது மனதுக்கும் வருமானத்துக்கும் நல்ல தொழிலாக இருக்கும்.

33. Goat Farming (Small Scale)

     Goat farming என்பது கிராமப்புற பெண்களுக்கு மிகவும் நம்பகமான agriculture business idea. பெரிய அளவில் தொடங்க தேவையில்லை; 2 அல்லது 3 ஆடுகளுடன் ஆரம்பிக்கலாம். சரியான உணவு மற்றும் பராமரிப்பு கொடுத்தால் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

இந்த தொழிலின் முக்கிய பலன்கள்:

  • Meat demand எப்போதும் இருக்கும்
  • Market தேடி அலைய வேண்டிய அவசியமில்லை

Goat purchase மற்றும் shed-க்கு முதலீடு தேவைப்படும். SHG groups மூலமாக training மற்றும் loan support கிடைக்கும். Village women மற்றும் land availability உள்ள பெண்களுக்கு இது long-term income தரும் தொழில்.

34. Millet-Based Products Business

      Millets இன்று health-conscious மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதனால் millet-based food products business பெண்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. வீட்டிலேயே ragi flour, millet dosa mix, health snacks போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம்.

இந்த business-ல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  • Quality raw materials
  • Clean processing & packing

Processing மற்றும் packing-க்கு ₹10,000 – ₹20,000 முதலீடு போதும். Organic stores, local shops, WhatsApp orders மூலம் விற்பனை செய்யலாம். Cooking தெரிந்த பெண்களுக்கு இது நல்ல growth potential கொண்ட தொழில்.

35. Poultry Egg Selling (Small Backyard Model)

     Backyard poultry egg selling என்பது small scale-ஆ தொடங்கக்கூடிய, risk குறைந்த business. 10–20 hens வைத்து ஆரம்பித்தாலே போதும். Eggs-க்கு தினசரி demand இருப்பதால் வருமானம் regular-ஆ வரும்.

இந்த business-ன் சிறப்பு:

  • Daily cash flow
  • Low maintenance model

Feed மற்றும் basic maintenance செலவுகள் moderate-ஆ இருக்கும். Neighbours மற்றும் local shops மூலமாக eggs விற்பனை செய்யலாம். Space உள்ள பெண்களுக்கு இது பாதுகாப்பான income source.

36. Seedling & Sapling Supply Business

     Seedling மற்றும் sapling supply business விவசாயம் மற்றும் gardening-க்கு இணைந்த ஒரு steady business idea. Farmers மற்றும் home gardeners-க்கு quality seedlings தேவை அதிகம்.

இந்த business-ல் நீங்கள் supply செய்யலாம்:

  • Vegetable seedlings
  • Flower & medicinal plant saplings

Small shed அல்லது shaded area போதும். முதலீடு ₹8,000 – ₹15,000 இருக்கும். Seasonal-ஆ sales அதிகரிக்கும். Agriculture-ல் ஆர்வம் உள்ள பெண்களுக்கு இது நிலையான வருமானம் தரும் தொழில்.

37. Organic Vegetable Growing & Direct Selling Business

இன்று chemical-free, organic vegetables-க்கு நல்ல demand உள்ளது. வீட்டின் backyard, terrace அல்லது சிறிய நிலத்தில் organic முறையில் காய்கறிகளை வளர்த்து நேரடியாக customers-க்கு விற்பனை செய்யலாம். Middle-class families health-ஐ முக்கியமாக பார்க்க ஆரம்பித்ததால், regular customers உருவாக வாய்ப்பு அதிகம். Seeds, compost, basic tools போதும்; முதலீடு குறைவு. Weekly sales மூலம் steady income கிடைக்கும். Agriculture-ல் ஆர்வம் உள்ள பெண்களுக்கு இது ஒரு sustainable home business idea.

38. Herbal Products Making Business

    Traditional herbs பயன்படுத்தி hair oil, herbal powder, simple skincare products போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம். Knowledge மற்றும் cleanliness மிக முக்கியம். Local customers-க்கு முதலில் sell செய்து trust build செய்தால் orders அதிகரிக்கும். Exhibition, WhatsApp orders மூலமாக slowly brand உருவாக்கலாம். Investment குறைவாக இருக்கும்; ஆனால் patience தேவை. Herbal knowledge உள்ள பெண்களுக்கு இது meaningful business.

39. Fish Pickle / Dry Fish Business

    Fish availability உள்ள பகுதிகளில் fish pickle மற்றும் dry fish business நல்ல லாபம் தரும். Traditional taste மற்றும் hygiene maintain செய்தால் customer repeat orders தருவார்கள். ஆரம்பத்தில் small batches செய்து WhatsApp orders மூலம் விற்பனை செய்யலாம். Coastal area women-க்கு இது niche market business ஆக இருக்கும்.

40. Cow Dung Products Business (Eco-Friendly Model)

    Eco-friendly trend காரணமாக cow dung-based products like diya, organic compost, fertilizer cakes ஆகியவற்றுக்கு demand உருவாகியுள்ளது. Raw material எளிதில் கிடைக்கும் என்பதால் cost குறையும். Temples, organic farmers, gardeners-க்கு supply செய்யலாம். Village women-க்கு இது low-risk, environment-friendly business idea.

41. Home Based Snacks & Sweets Business

      Murukku, mixture, seedai, laddu, mysore pak போன்ற snacks & sweets-க்கு எப்போதும் demand இருக்கும். Festival season-ல் orders அதிகரிக்கும். வீட்டிலிருந்தே hygiene-ஆ தயாரித்து nearby shops, WhatsApp orders மூலமாக விற்பனை செய்யலாம். Cooking skill உள்ள பெண்களுக்கு இது high demand home business.

42. Catering Support / Cooking Assistant Service

     பெரிய catering business-க்கு cooking assistant-கள் தேவை அதிகம். Full catering setup இல்லாமலே, cooking support service-ஆ பெண்கள் வேலை செய்யலாம். Daily wage அல்லது event-based income கிடைக்கும். Experience இல்லாத பெண்களுக்கும் இது entry-level food business opportunity.

43. Home Based Tailoring + Boutique Model

    Basic tailoring-ஐ boutique style-ஆ மாற்றி, readymade blouse, kids wear, simple women wear sell செய்யலாம். Custom stitching + ready products combo நல்ல income தரும். Instagram showcase மூலம் orders அதிகரிக்கும். Tailoring தெரிந்த பெண்களுக்கு next-level business.

44. Home Based Handicrafts Business

    Palm leaf items, jute bags, bamboo crafts, handmade decor items போன்ற handicrafts-க்கு urban market-ல் demand உள்ளது. SHG network, exhibitions, online platforms மூலம் sales செய்யலாம். Creativity உள்ள rural women-க்கு இது நல்ல self employment idea.

45. Mobile Accessories Reselling Business

     Mobile accessories எப்போதும் fast-moving products. Charger, earphones, covers, screen guards போன்றவற்றை wholesaler-லிருந்து வாங்கி resell செய்யலாம். Home-based-ஆ WhatsApp & Instagram மூலம் orders எடுக்கலாம். Young women-க்கு இது easy reselling business.

46. Online Form Filling & Documentation Service

     Government forms, exam applications, insurance forms, Aadhaar updates போன்றவற்றுக்கு மக்கள் help தேடுகிறார்கள். Computer basics தெரிந்த பெண்கள் வீட்டிலிருந்தே இந்த service செய்யலாம். Rural & semi-urban areas-ல் demand அதிகம். Investment minimal, trust build செய்தால் steady income.

47. Home Based Baking Ingredients Supply

      Bakery items செய்யும் வீட்டு பெண்கள் raw materials தேடி அலைவார்கள். Baking ingredients, moulds, packing materials supply செய்யும் small trading business தொடங்கலாம். Niche customers இருப்பதால் repeat sales கிடைக்கும். Bakery trend அதிகரிப்பதால் future scope நல்லது.

48. Online Course / Skill Training (Tamil)

      ஒரு skill-ல் expert இருந்தால் அதை online course-ஆ மாற்றலாம். Tailoring basics, cooking classes, spoken Tamil/English, exam basics போன்ற courses record செய்து sell செய்யலாம். Once created, repeated income possible. Educated women-க்கு இது smart digital business.

49. Home Based Cleaning Service (Small Scale)

      House cleaning, kitchen deep cleaning, move-in/move-out cleaning போன்ற services-க்கு urban areas-ல் demand உள்ளது. Women group-ஆ சேர்ந்தால் work easy. Equipment-க்கு investment moderate-ஆ இருக்கும்; but monthly recurring income கிடைக்கும்.

50. Women-Focused Service Business (Personal Assistant / Support Services)

    Working women-க்கு errands, bill payment help, elder coordination, school support போன்ற personal support services தேவை அதிகரிக்கிறது. Trust மற்றும் reliability முக்கியம். Investment almost zero. Middle-aged women-க்கு suitable service-based business.

Which type of business is best for ladies? – Top 3 Final Selection

இந்த கேள்வி எல்லா பெண்களுக்கும் வருவது தான்.
ஆனால் “best business” என்பது எல்லாருக்கும் ஒன்றாக இருக்காது.
Safety + sustainability + practicality அடிப்படையில்,
2026 தமிழ்நாடு சூழலில் பெண்களுக்கு சிறந்த Top 3 business types இதோ:

1. Home Based Food Business (Catering / Bakery / Pickle / Ready-to-Cook)

   பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் சமையல் திறனை வைத்து தொடங்கக்கூடிய business இது. Food business-க்கு தமிழ்நாட்டில் எப்போதும் demand இருக்கும். முதலீடு குறைவு, வீட்டிலிருந்தே செய்யலாம், repeat customers கிடைக்கும் என்பதே இதன் பெரிய பலம். Catering, home bakery, pickle & masala powder, ready-to-cook items போன்றவை housewife-க்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை. Government support, SHG loan, Mudra loan போன்றவை இந்த category-க்கு எளிதாக கிடைப்பதும் ஒரு கூடுதல் advantage.

👉 Why best?
Low risk, steady income, family support easy.

2. Skill-Based Home Business (Tailoring, Beauty, Aari, Mehndi, Tuition)

      ஒரு skill இருந்தால் அதுவே capital. Tailoring, beauty parlour, aari work, mehndi artist, home tuition போன்ற தொழில்கள் பெண்களுக்கு நீண்ட காலம் வருமானம் தரக்கூடியவை. Experience அதிகரிக்கும் போது income கூடும். Shop rent இல்லாமல் வீட்டிலிருந்தே செய்ய முடியும் என்பதால் செலவுகள் குறையும்.

👉 Why best?
Skill வளர வளர income உயரும், competition இருந்தாலும் survival strong.

3. Online & Digital Service Business (Online Tuition, Blogging, Affiliate, Reselling)

   Mobile phone மற்றும் internet இருந்தால் போதும். Online tuition, Tamil blogging, affiliate marketing, WhatsApp reselling, Instagram business போன்றவை பெண்களுக்கு location freedom கொடுக்கும். குறிப்பாக educated women, young women, housewife-க்களுக்கு இது 2026-ல் மிகப் பெரிய வாய்ப்பு. Slow start இருந்தாலும் long-term-ஆ நல்ல income உருவாக்க முடியும்.

👉 Why best?
Future-proof, scalable, work-from-home freedom.

Government Schemes & Subsidies for Women (Tamil Nadu Focused)

தமிழ்நாட்டில் பெண்கள் சுயதொழில் செய்ய அரசு பல வகையில் ஆதரவு தருகிறது. பல பெண்கள் இதை முழுமையாக பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.

முக்கிய அரசு திட்டங்கள்

1. SHG (Self Help Group) Loans

   மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன், training, marketing support கிடைக்கும். Food, tailoring, agarbatti, paper bag போன்ற தொழில்களுக்கு மிகவும் பயனுள்ளது.

2. Mudra Loan (Shishu / Kishore / Tarun)

    ₹50,000 முதல் ₹10 லட்சம் வரை collateral இல்லாமல் கடன். Home based & small business-க்கு மிகப் பிரபலமான திட்டம்.

3. Stand-Up India Scheme

    SC/ST மற்றும் women entrepreneurs-க்கு ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரை bank loan support.

4. Tamil Nadu Corporation for Development of Women (TNCDW)

    Women entrepreneurship training, skill development, SHG support வழங்குகிறது.

5. PMEGP (Prime Minister Employment Generation Programme)

    Manufacturing & service business-க்கு subsidy உடன் loan கிடைக்கும்.

6. Mahalir Udavi Thittam (State level support)

    Rural women self employment-க்கு Tamil Nadu அரசு வழியாக support.

முக்கிய குறிப்பு:
ஒரு business தொடங்கும் முன் bank + local Mahalir Thittam office-ல் enquiry செய்வது மிகவும் அவசியம்.

Useful 10 Business Resources for Women Tamil Nadu

தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்மையில் உதவும் resources மட்டும்:

1. District Industries Centre (DIC)

தமிழ்நாட்டில் business தொடங்க நினைக்கும் பெண்களுக்கு முதல் வழிகாட்டி DIC. MSME registration, subsidy schemes, PMEGP loan guidance போன்ற உதவிகளை இங்கே பெறலாம்.
https://www.msme.tn.gov.in

2. Tamil Nadu Corporation for Development of Women (TNCDW)

பெண்கள் சுயதொழில் தொடங்க training, SHG support, entrepreneurship programmes வழங்கும் அரசு நிறுவனம்.
https://www.tncdw.tn.gov.in

3. Mahalir Thittam (TNRLM)

கிராமப்புற பெண்களுக்கு self employment, SHG loan, livelihood schemes வழங்கும் முக்கியமான திட்டம்.
https://tnrlm.tn.gov.in

4. Mudra Loan (Shishu / Kishore / Tarun)

Small & home based business தொடங்க collateral இல்லாமல் கடன் பெற உதவும் மத்திய அரசு திட்டம்.
https://www.mudra.org.in

5. Stand-Up India Scheme

Women entrepreneurs-க்கு ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரை bank loan support வழங்கும் திட்டம்.
https://www.standupmitra.in

6. SIDBI (Small Industries Development Bank of India)

Women-led MSME businesses-க்கு finance, credit support வழங்கும் அரசு வங்கி.
https://www.sidbi.in

7. MSME Development Office & Udyam Registration

Business registration, training, subsidy awareness பெற உதவும் அரசு துறை.
https://www.msme.gov.in
https://udyamregistration.gov.in

8. Government Skill Training Institutes (ITI / Polytechnic)

பெண்களுக்கு free அல்லது subsidised skill training வழங்கும் அரசு பயிற்சி நிறுவனங்கள்.
https://www.dgt.gov.in
https://www.tndte.gov.in

9. Panchayat / Block Development Office (BDO)

கிராமப்புற பெண்களுக்கு அரசு திட்டங்கள், SHG coordination, livelihood guidance வழங்கும் அலுவலகம்.
https://www.tnrd.tn.gov.in

10. Online Selling Platforms (Women Friendly)

Home & online business தொடங்க பெண்கள் பயன்படுத்தக்கூடிய நம்பகமான platforms.
https://www.meesho.com
https://sellercentral.amazon.in

ந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால்…

இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருந்தது என்றால்,
👉 thodar.in வலைத்தளத்தை தொடர்ந்து follow செய்யுங்கள்.
👉 இந்த தகவல்களை உங்கள் நண்பி, சகோதரி, அம்மா, உறவினர்கள் அனைவருடனும் share செய்யுங்கள்.

பெண்கள் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு,
இந்த ஒரு share கூட அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடும்.

📲 WhatsApp Channel – thodar.in
https://whatsapp.com/channel/0029Vb6mw80FHWqAmufH1u3P

📘 Facebook Page – thodar.in
https://www.facebook.com/thodar.in

👉 தொடர்ந்து business ideas for women,
👉 home business ideas,
👉 Tamil Nadu women self employment guidance
போன்ற பயனுள்ள தகவல்களை பெற thodar.in-ஐ follow செய்ய மறக்காதீர்கள்.

FAQ – Business Ideas for Women Tamil 2026

1. Which business is best for women without experience?

Food business, reselling, soap making, tailoring basics போன்றவை experience இல்லாமலே தொடங்கலாம்.

2. Housewives-க்கு best business எது?

Home based catering, bakery, tuition, beauty parlour, online reselling.

3. Low investment business ideas for women என்ன?

Papad making, mehndi artist, blogging, affiliate marketing, tailoring.

4. Online business ideas for women Tamil Nadu-வில் work ஆகுமா?

ஆம். Online tuition, Instagram selling, Tamil blogging நல்ல scope கொண்டது.

5. Government loan இல்லாமல் business தொடங்கலாமா?

முடியும். Small scale-ஆ தொடங்கி பிறகு loan எடுக்கலாம்.

6. Village women-க்கு best business ideas என்ன?

Papad, agarbatti, goat farming, SHG-based food business.

7. Women entrepreneurs failure ஏன் நடக்கிறது?

Planning இல்லாமல் தொடங்குதல், market research இல்லாமை, patience இல்லாதது.

8. Home business ideas for women profitable ஆகுமா?

ஆம், consistency இருந்தால் மிகவும் profitable.

9. One woman one business concept practical-ஆ?

ஆரம்பத்தில் ஆம்; வளர்ந்ததும் helper தேவைப்படும்.

10. 2026-ல் பெண்களுக்கு future business எது?

Online services + food-based business + skill-based home business.

Post a Comment

0 Comments