Advertisement

சுய தொழில்: குறைந்த முதலீட்டில் கோழி வளர்ப்பு மாதம் 15000 முதல்

    குறைந்த முதலீட்டில் கோழி வளர்ப்பு மாதம் 15000 முதல் லாபம் எடுக்கும் சுய தொழில் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை பக்கம் போனா கோழி வளர்ப்பை பத்தி யாராவது ஒருத்தர் பேசாம இருக்க மாட்டாங்க. டீ கடையில, தீவன கடையில, சந்தையில – எல்லா இடத்திலும் இதே பேச்சு தான். நான் நேரடியாக கோழி வளர்க்கல. ஆனா இந்த பக்கம் கோழி வளர்க்குற பல பேரோட உட்கார்ந்து பேசினது, சந்தையில நின்னு பார்த்தது, சிலர்ட்ட கணக்கு கேட்டது – அதுல இருந்து புரிஞ்ச விஷயங்களை தான் இங்க அனுபவம் மாதிரி எழுதுறேன்.

சுய தொழில்: குறைந்த முதலீட்டில் கோழி வளர்ப்பு மாதம் 15000 முதல்

ஏன் இங்க எல்லாரும் கோழி வளர்ப்பை பத்தி பேசுறாங்க?

ஒரு காரணம் தான். பணம் சுத்தி வருது. நாமக்கல் பக்கம் முட்டை, சேலம்–ஈரோடு பக்கம் broiler, கோவை பக்கம் சின்ன அளவு பண்ணைகள். எல்லாத்துக்கும் சந்தை இருக்கு. ஆனா எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கும்னு யாரும் சொல்ல மாட்டாங்க.

ஒரு ஆள் சொன்னது ஞாபகம் இருக்கு – “கோழி வளர்ப்பு நல்ல தொழில் தான், ஆனா அது நம்ம மனசை சோதிக்குற தொழில்.” அது உண்மை.

யாருக்கு இது செட் ஆகும், யாருக்கு ஆகாது?

₹50,000 க்குள்ள ஆரம்பிக்க நினைக்குறவங்க, வீட்டுக்குப் பக்கத்துல கொஞ்சம் இடம் இருக்குறவங்க, முழு நேரமா இல்லன்னாலும் தினமும் கொஞ்ச நேரம் பார்க்க தயாரா இருக்குறவங்க – இவங்களுக்கு தான் இது செட்.

ஒரே batch-ல பெரிய லாபம் எடுக்கணும், சீக்கிரம் பணக்காரன் ஆகணும்னு நினைக்குறவங்கக்கு இது சரியான வழி இல்லை.

எந்த கோழி நல்லது?

பெரும்பாலானவர்கள் ஆரம்பத்துல broiler தான் எடுக்குறாங்க. காரணம் – சீக்கிரம் வளரும். 40 நாளுக்குள்ள முடிஞ்சுடும். ஆனா விலை தினம் தினம் மாறும். சில வாரம் நல்லா இருக்கும், சில வாரம் பார்த்தாலே மனசு உடையும்.

நாட்டுக்கோழி வளர்க்குறவங்களும் இருக்காங்க. விலை நல்லா கிடைக்கும். ஆனா வளர்க்க நேரம் எடுக்கும். கவனிக்கலன்னா நோய் சீக்கிரம் பிடிக்கும்.

செலவு எப்படி போகுது?

கணக்கு கேட்டா எல்லாரும் ஒரே மாதிரி தான் சொல்றாங்க. குஞ்சு விலை பெரிய விஷயம் இல்லை. தீவனம் தான் காசு குடிக்கும்.

150 கோழி வைத்தா, குஞ்சுக்கு 5–6 ஆயிரம் போகும். தீவனம் 25–30 ஆயிரம் வரை போகும். மருந்து, மின்சாரம், சின்ன சின்ன செலவுகள் சேர்த்து பார்த்தா 40–45 ஆயிரம் தாண்டிடும்.

இதுல லாபம் எவ்வளவு வரும்னு விலை தான் முடிவு பண்ணும்.

தினசரி வேலை பெரியதா?

பெரிசா இல்ல. ஆனா கவனம் தேவை. காலை, மாலை தீவனம். தண்ணீர். சுத்தம். இதெல்லாம் விட்டுட்டா தான் பிரச்சனை ஆரம்பம்.

ஒரு broiler பண்ணை பார்த்தப்போ ஒருவர் சொன்னது – “ஒரு நாள் அலட்சியம், ஒரு வார நஷ்டம்.” அது exaggeration இல்ல.

நோய் வந்தா என்ன ஆகும்?

இது தான் எல்லாரும் பயப்படுற விஷயம். நோய் வந்தா லாபம் எல்லாம் ஒரு வாரத்துல போயிடும். அதனால தடுப்பூசி, சுத்தம், கூட்டமாக வைக்காம இருக்குறது – இதெல்லாம் சும்மா சொல்ற விஷயம் இல்ல.

“பார்ப்போம்”ன்னு விட்டா கோழி வளர்ப்பு பாராமலே முடிஞ்சுடும்.

சந்தை விலை – நம்ம கையில இல்லாத விஷயம்

கடந்த ஒரு வருடத்துல broiler விலை 100 ரூபாவுக்கு கீழ போன நாட்களும் இருக்கு, 170–180 போன நாட்களும் இருக்கு. சாதாரண நாள்கள்ல 120–150 சுற்றிதான் இருந்தது.

நாட்டுக்கோழி 300–400 வரைக்கும் போகுது. பண்டிகை நேரத்துல இன்னும் மேல.

இதுல உண்மை என்னன்னா – விலை நம்ம கையில இல்லை. நம்ம கையில இருக்குறது செலவைக் கட்டுப்படுத்துறது மட்டும்.

லாபம் உண்மையா வருதா?

150 broiler சரியா போனா, ஒரு batch-ல 8–10 ஆயிரம் வருதுனு சிலர் சொல்றாங்க. சில batch-ல அதே அளவு வராமலும் போகுது.

ஒரு வருஷத்துல 6–7 batch எடுத்தா, சின்ன அளவுல கூட 50–70 ஆயிரம் வரைக்கும் வர வாய்ப்பு இருக்கு. ஆனா இதை guaranteeன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.

நான் பார்த்த பொதுவான தவறுகள்

அவசரமா அதிக கோழி வாங்குறது. விலை பார்க்காம விக்குறது. டாக்டர் கேட்டுடாம மருந்து கொடுக்குறது. இதெல்லாம் ஒரே மாதிரி எல்லாரும் சொல்ற தவறுகள்.

முடிவா என்ன சொல்ல வர்றேன்?

கோழி வளர்ப்பு ஒரே மாதத்தில் வாழ்க்கை மாறும் தொழில் இல்லை. ஆனா பொறுமையா, கணக்கோட, மெதுவா போனா – கூடுதல் வருமானத்துக்கு நல்ல வழி. கூடிய விரைவில் நான் 4 சேவல் 5 கோழி வரை தொடக்கி 3 முதல் 6 மாதங்களில் எனக்கு நடந்த அனுபவத்தை கூற இருக்கிறேன், இது போல தகவல்களை தெரிந்து கொள்ள நமது WhatsApp Channelயை FOLLOW செய்யுங்கள்.

Post a Comment

0 Comments