“செய்யும் தொழிலே தெய்வம்” என்று சொல்வது ஒரு பழமொழி.
ஆனால் இன்றைய காலத்தில் அது வெறும் வார்த்தை அல்ல —
அது பலரின் வாழ்க்கை யதார்த்தமாக மாறி இருக்கிறது.
IT வேலை, அரசு வேலை, வங்கி வேலை, பெரிய தனியார் நிறுவனம் —
இவை எல்லாம் கிடைத்தால் வாழ்க்கை செட்டில் ஆகும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வேலைகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
அதிலும் இன்று, ஒரு வேலை கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற நிலைக்கு சமூகம் வந்து விட்டது.
சேலத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம் – பெரிய உண்மை
கடந்த வாரம் சேலம் நகருக்கு சென்றிருந்த போது நடந்த ஒரு சம்பவம்,
இன்றைய வேலை, உழைப்பு, பணம் குறித்த உண்மையை தெளிவாக உணர வைத்தது.
சேலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு வங்கிக்கு செல்ல வேண்டிய அவசரம். ஆனால் அந்த வழியில் பஸ் வசதி இல்லை. இடமும் சரியாக தெரியவில்லை.
ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட போது,
“சென்று வர 300 ரூபாய்” என்றார்.
உண்மையில், அந்த இடத்திற்கு பஸ் இருந்திருந்தால் 10 ரூபாயில் போய் இருக்கலாம். நடந்து சென்றிருந்தால் ஒரு ரூபாய் கூட செலவாகாது. ஆனால் அவசர வேலை.
அப்போது அருகில் இருந்த நபர்,
“RAPIDO போலாம்” என்றார்.
நாங்களும் சம்மதித்தோம்.
மெசேஜ் வந்தது:
“23 ரூபாய் ஆகும், கொஞ்சம் பார்த்து கொடுங்கள், வருகிறோம்.”
இரண்டு RAPIDO பைக் வந்தன. நாங்கள் சென்றோம்.
ஒவ்வொருவருக்கும் 30 ரூபாய் கொடுத்தோம்.
மொத்தம் 60 ரூபாய்.
அந்த 23 ரூபாய்க்குள் இருக்கும் வாழ்க்கை
பயணம் முடிந்த பிறகு,
அவர்களிடம் கேட்டோம்:
“ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?”
அவர்கள் சொன்ன பதில் தான் யதார்த்தம்.
“நீங்கள் கொடுக்கும் 23 ரூபாயில்,
5 முதல் 10 ரூபாய் வரை நிறுவனத்துக்கு போகும்.
மீதம்தான் எங்களுக்கு.”
அதாவது, ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால்,
20 முதல் 50 சவாரிகள் வரை செய்ய வேண்டிய நிலை.
அதுவும்:
- தூரம் அதிகமாக இருந்தால் தான் வருமானம்
- பெட்ரோல் செலவு
- உடல் உழைப்பு
- வெயில், மழை, போக்குவரத்து அபாயம்
இவையெல்லாம் சேர்ந்து தான் அந்த வருமானம்.
செய்யும் தொழில்தான் முக்கியம் இல்லை
இந்த இடத்தில்தான் ஒரு விஷயம் தெளிவாகிறது.
நாம் என்ன தொழில் செய்கிறோம் என்பதே முக்கியம் இல்லை.
அதை எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம்.
நம்மை சுற்றி,
பல ஆயிரம் பேர் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு
300 ரூபாய்,
500 ரூபாய்,
700 ரூபாய் சம்பாதிப்பதே
பலருக்கு பெரிய சவாலாக இருக்கிறது.
அந்த சூழலில்,
கிடைக்கும் வேலையை
முழு ஈடுபாட்டுடன் செய்வதே
உண்மையான போராட்டம்.
100 ரூபாய் கூட இலவசம் அல்ல
இன்றைய உலகில், 100 ரூபாய் கூட
யாரும் சும்மா கொடுத்து விட மாட்டார்கள்.
அந்த பணத்துக்கு பின்னால்:
- உழைப்பு
- நேரம்
- உடல் வலி
- மன அழுத்தம்
எல்லாம் இருக்கிறது.
அதனால் தான்,
பணம் இருந்தால் தான் மதிப்பு என்ற கடுமையான உண்மை
பலரின் வாழ்க்கையில் தினமும் உணரப்படுகிறது.
முடிவாக…
இன்று IT வேலை கிடைக்காமல் இருக்கலாம்.
அரசு வேலை கிடைக்காமல் இருக்கலாம்.
வங்கி வேலை கிடைக்காமல் இருக்கலாம்.
ஆனால்,
உழைக்க தயாராக இருந்தால்,
வாழ்க்கை நம்மை கை விடாது.
எந்த தொழிலாக இருந்தாலும்,
அதில் நேர்மையும் முழு ஈடுபாடும் இருந்தால்,
அதே தொழிலே தெய்வமாக மாறும்.
பணம் சம்பாதிக்க தொடங்குங்கள்.
சிறியது என்றால் கூட பரவாயில்லை.
அதே சிறிய தொடக்கம் தான்
நாளை பெரிய நம்பிக்கையாக மாறும்.
இதுபோல செய்திகளை தெரிந்து கொள்ள நமது FB, WHATSAPP, X பக்கங்களில் சேருங்கள்.

0 Comments